புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரநாதர் சத்தியாயதாச்சி கோவிலில் தேர்வெள்ளோட்டம் நடந்தது. கடலுார் மாவட்டம் திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் சத்தியாயதாச்சி கோவிலில் கடந்த 37 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. அதனையொட்டி தேர்சீரமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக நடந்தது. இந்நிலையில் நேற்று காலை தேர்வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி 7.30 மணிக்கு திருச்சோபுரநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 8.15 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றிவலம் வந்தது. இதில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்து இழுத்தனர்.