பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு 2012 குடம் பாலபிஷேகம் நடக்கிறது.ஈரோடு பி.எஸ்.பார்க்கில் மேம்பாலம் கட்டும் அரசின் திட்டத்தை கைவிடக் கோரியும், ஆக்கிரமிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கவும், அரசு கெஜட்டில் வெளியிட்ட 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்றவும், 2012 குட பாலபிஷேகம் நடத்துவது என, நில மீட்பு இயக்கம் அறிவித்தது. காலை 9.30 மணிக்கு, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2012 பால் குடங்கள் ஊர்வலம் நடக்கிறது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கின்றனர். நிலமீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ""2012ல் நடப்பதால், 2012 என்பது வெறும் எண்ணிக்கைக்காக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஊர்வலத்தில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பால்குட அபிஷேகத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், 11 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் துவங்கும் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, பெரிய மாரியம்மன் கோவிலை வந்தடையும், என்றார்.