பதிவு செய்த நாள்
08
செப்
2018
12:09
களி மண்ணாலான விநாயகரும் கூட, குளத்துக்கு அடியில் கரைந்து தங்கி விடுவார்; ஆனால், கரும்புச் சக்கையால் ஆன விநாயகர், மண்ணோடு மண்ணாக மக்கி மறைந்து விடுவார். மீன்களுக்கு உணவாகவும் மாறி விடுவார். இத்தகைய கண்டுபிடிப்பை, குமரகுரு கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குமரகுரு கல்லூரி பேஷன் டெக்னாலஜி மாணவி ஷாலினி, அப்பேரல் டெக்னாலஜி மாணவி நிவேதா, இழை ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் பிரத்திகர், இயற்கை இழை ஆராய்ச்சி யாளர் கவுதம், கல்லூரி முதல்வர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது: கரும்புச்சக்கையில் ஸ்டார்ச் கலந்து, விநாயகர் சிலையை உருவாக்கினோம்.
இவ்விநாயகருக்கு இயற்கை சாயம் பூசலாம். மூன்று வண்ணங்களில், இதை தயார் செய்கிறோம். 30 மாணவர்கள் ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியில் இதை உருவாக்கி யுள்ளோம். பகாஷ் கணபதி என பெயரிட்டுள்ளோம். கரும்புச்சக்கை விநாயகர் சிலை தயார் செய்ய, பிளாஸ்டர் ஆப் பாரீசை விட, 40 சதவீதம் செலவு குறைகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.