பதிவு செய்த நாள்
08
செப்
2018
02:09
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே, பெரும் பூஜை திருவிழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, பாப்பக்காப்பட்டி அடுத்த, வாத்திக்கவுண்டனூரில், பல்வேறு சுவாமிகளுக்கு பெரும் பூசை திருவிழா நடந்தது.
இதற்காக, கடந்த 4ல், அய்யர்மலையில் பொங்கலிட்டு கிடா வெட்டி பூஜை நடந்தது. அடுத்து, நேற்று முன்தினம் (செப்.,6ல்) இரவு, சரவணபுரம் கட்டையன் கருப்பு சுவாமிக்கு காவு கொடுத்து, அடைசல் பூஜை நடத்தப்பட்டது.
நேற்று (செப்., 7ல்) காலை, வாத்திக்கவுண்டனூரில் உள்ள மதுரை வீரன் சுவாமிக்கு, பொங்கல் வைத்து, கிடா வெட்டி பூஜை செய்யப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து எராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.