பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
மல்லசமுத்திரம்: மாரம்பாளையம், கலிங்காயம்மன் கோவிலில் வரும், 12ல், கும்பாபிஷேக விழா நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளி அடுத்த, மாரம்பாளையத்தில் புதிதாக கட்டபட்டுள்ள கலிங்காயம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. வரும், 11ல் காலை, 6:00மணிமுதல் இரவு, 10:00 மணி வரை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், கோபூஜை, வாஸ்துஹோமம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, கண்திறப்பு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 12 காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 6:30 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது.