சென்னிமலை முருகன் கோவிலுக்கு மாடுகளுக்கு தீவனம் தேவை: பக்தர்கள் வழங்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2018 02:09
சென்னிமலை: ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும், சென்னிமலை முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் நேர்த்திக்கடனாக, 25 பசு மாடுகள் வழங்கியுள்ளனர். மலையடிவாரத்தில் உள்ள கோசாலையில், கோவில் பணியாளர்கள், மாடுகளை பராமரிக் கின்றனர். தற்போது கோவில் கால்நடைகளுக்கு, தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விருப்ப முள்ள பக்தர்கள், தீவனம் வழங்க, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். தீவனம் வழங்க விரும்புவோர், 04294-250223 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.