பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
ஆழ்வார்குறிச்சி:ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் - மீனாட்சியம்பாள் கோயிலில் வரும் 6ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. ரவணசமுத்திரத்தில் சொக்கலிங்கநாதர் - மீனாட்சியம்பாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் காலையில் வேதபாராயணம், கும்ப பூஜை ஆகிய வைபவங்களும், பின்னர் சுவாமி, அம்பாள் வீதியுலாவும், இரவு சிறப்பு பூஜையும், சுவாமி, அம்பாள் எழுந்தருளலும் நடந்தது. நான்காம் திருநாளான நேற்று காலை சுவாமி, அம்பாள் எழுந்தருளல், பின்னர் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். வரும் 6ம் தேதி காலை கேடயத்தில் சுவாமி, அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், தேரோட்டமும் நடக்கிறது. 7ம் தேதி தைப்பூசத்தன்று தீர்த்தவாரி வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் கட்டளைதாரர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.