பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
கடையநல்லூர்:திரிகூடபுரம் உச்சிமகா காளியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது.கடையநல்லூர் அருகேயுள்ள திரிகூடபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் மகா கணபதி, உச்சி மகா காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல லட்ச ரூபாய் செலவில் பொதுமக்கள் சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கும்பாபிஷேக விழா வரும் 4ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் காலை 6 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணிக்கு தீர்த்தம் அழைத்து வரப்படுகிறது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு முதல் யாகசாலை பூஜை துவங்குகிறது.5ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 4 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. அதனையடுத்து யாக சாலையிலிருந்து மகா கும்பாபிஷேகத்திற்காக கும்பம் எழுந்தருகிறது. காலை 9.10 மணிக்கு விமான அபிஷேகமும், 9.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், 11 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, 7 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சென்னை திரத்தியங்கிராதேவி உபாஸகர் சென்னை சாப்தஸ்ரீ சிதம்பரேஸ்வர சுவாமிகள், சக்திகணேஷ் சுவாமி மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர். மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை திரிகூடபுரம் உச்சி மகா காளியம்மன் கோயில் திருப்பணி விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.