பதிவு செய்த நாள்
10
செப்
2018
04:09
* செப்டம்பர் 8 ஆவணி 23: மாத சிவராத்திரி, இளையான்குடி மாற நாயனார் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் தேர், மதுரை நவநீத கிருஷ்ணர் தவழ்ந்த கண்ணன் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வெள்ளி கேடய வாகனம்.
* செப்டம்பர் 9 ஆவணி 24: அமாவாசை, திருச்செந்தூர் முருகன் தெப்பம், மதுரை நவநீத கிருஷ்ணர் ஆண்டாள் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கஜமுக சம்ஹாரம், நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷணருக்கு நடையழகு சேவை.
* செப்டம்பர் 10 ஆவணி 25: மறைஞான சம்பந்தர் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் மஞ்சள் நீராடல், மதுரை நவநீத கிருஷ்ணர் பரமபதநாதர் திருக்கோலம், உப்பூர் விநாயகர் காமதேனு வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* செப்டம்பர் 11 ஆவணி 26: பலராம ஜெயந்தி, சந்திர தரிசனம், கல்கி ஜெயந்தி, சாம உபாகர்மம், திண்டுக்கல், தேவகோட்டை, உப்பூர், தேரெழுந்தூர், மிலட்டூர், திருவலஞ்சுழி விநாயகர் கோயில்களில் திருக்கல்யாணம், மதுரை நவநீதகிருஷ்ணர் பூப்பல்லக்கு, தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
* செப்டம்பர் 12 ஆவணி 27: முகூர்த்தநாள், விபத்தார கவுரி விரதம், திண்டுக்கல், தேவகோட்டை, மிலட்டூர், உப்பூர் கோயில்களில் தேர், மதுரை நவநீத கிருஷ்ணர் ராஜாங்க அலங்காரம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் யானை வாகனம்.
* செப்டம்பர் 13 ஆவணி 28: விநாயகர் சதுர்த்தி, மதுரை நவநீதகிருஷ்ணர் மச்சாவதாரம், திருவலஞ்சுழி சுவேத
விநாயகர் தேர், திருப்பதி ஏழுமலையப்பன், மதுரை தல்லாகுளம் பிரசன்னவெங்கடேசர், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்.
* செப்டம்பர் 14 ஆவணி 29: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம், திருப்பதி ஏழுமலையப்பன் சின்னசேஷ வாகனம், மதுரை நவநீதகிருஷ்ணர் கோவர்த்தனகிரியில் பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்தனப்பிரபை, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் சிம்ம வாகனம்.