பதிவு செய்த நாள்
11
செப்
2018
11:09
மதுரை:சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண்ணிலான விநாயகர் சிலைகளை மதுரை மாவட்டத்தில் குறிப்பிட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும், என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியையொட்டி களிமண்ணினால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களான விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். நீரில் கரையும் தன்மையுடைய சிலைகளை உபயோகி க்க வேண்டும்.
மதுரையில் வைகை வடகரை, கீழத்தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவ்வந்திகுளம் கண்மாய்,அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாய், வாடிப்பட்டி தாலுகாவில் குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, அய்யனார் கோவில் ஊருணி, திருமங்கலம் தாலுகாவில் குண்டாறு, மறவன்குளம் கண்மாய், சிவரக் கோட்டை கமண்டலநதி, பேரையூர் தாலுகாவில் மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய், மேலூர் தாலுகாவில் மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி சிவன் கோயில் தெப்பத்தில் கரைக்க வேண்டும் என்றார்.