பதிவு செய்த நாள்
11
செப்
2018
11:09
உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உடுமலை அருகே, சோமவாரபட்டியில் ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. கால்நடைகளின் காவல் தெய்வமாக மக்கள், வழிபட்டு வருகின்றனர். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலில் அமாவாசை உள்ளிட்ட, சிறப்பு தினங்களில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும், பொங்கலை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழாவும் நடத்தப்படுகிறது. திருவிழாவின் போது, சுற்றுப்பகுதிகளிலுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள், வண்டி களில் வந்து, தரிசனம் செய்து செல்கின்றனர்.
பல கி.மீ., தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், கோவில் பகுதியில், கழிப்பிட வசதியில்லாத தால் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண் பக்தர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. கோவிலுக்கு அருகே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட, பொது சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல், பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. சீரமைத்து பக்தர் களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.