பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
கோவை: கோவை வடக்கு சர்வோதய சங்கம் சார்பில், கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது. இதில், கலையம்சம் மிக்க விநாயகர், மூகாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிசிலைகள் கிடைக்கின்றன. புதிய வடிவங்களில், அறுபடை வீடு, கிரிக்கெட், பள்ளி ஆண்டு விழா, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு கொலுசெட் கிடைக்கிறது. காகித தனி பொம்மைகள், சீன களிமண் பொம்மைகள் கண்காட்சியின் தனித்துவம்.கதர், பாலியஸ்டர் ஆடைகள் 30 சதவீத தள்ளுபடியிலும், பட்டாடைகள், 20சதவீத தள்ளுபடியிலும், கம்பளிகள் 15 சதவீத தள்ளுபடியிலும், விற்பனை செய்யப் படுகிறது. தீபாவளி வரை கண்காட்சி, விற்பனை உண்டு. கதர்பவன், நவாம் ஹக்கீம் சாலை. 0422 - 2390950