பதிவு செய்த நாள்
14
செப்
2018
02:09
கோவை: கோவை மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள, 1,850 விநாயகர் சிலைகளுக்கு, 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பல்வேறு பகுதிகளில் நேற்று (செப்., 13ல்) விநாயகர் சதுர்த்தி விழா, விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாநகர் முழுவதும், 394 விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப் பட்டது. அவற்றில், 386 விநாயகர் சிலைகளை நேற்று (செப்., 13ல்) பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்து முன்னணி, 166, இ.ம.க.,(தமிழகம்), 37, அகில இந்திய அனுமன் சேனா, 35, பாரத் சேனா,24, பாரத் சேனா (தமிழகம்),6, சிவசேனா,18, பா.ஜ., 11, வி.எச்.பி., 25, விவேகானந்தர் பேரவை,16, ராமர் சேனா,4,வி.எச்.பி(தமிழகம்), 2, பொதுமக்கள், 41, என மொத்தம், 386, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை புறநகரில், பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம், வால்பாறை, பேரூர், கிணத்துக்கடவு, அன்னூர் உட்பட பல்வேறு இடங்களில், போலீசார் அனுமதியளித்த 1,468 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மூன்று நாட்களுக்கு பிறகு, நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.