பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
(பள்ளியறைத் தத்துவம்)
மதுரை ஸ்ரீ மீனாக்ஷிஅம்மன் திருக்கோவிலின் பள்ளியறை நிகழ்ச்சி பாமரர்க்கும் பரசுகம் தர வல்ல நிகழ்ச்சியின் பின் பிரதிபலிப்பாகும். அதனை இப் பள்ளியறை தத்துவம் என்ற நிகழ்வின் விரித்த விளக்கமாகும்.
விண்ணிலிருப்பதே மண்ணிலும் நிறைந்தது எனவும், அண்டத்திலும் பிண்டத்திலும் நிலவுவதும், மறைபோற்றும் இறையே எனக்கூறுவர். மஹத் என்ற பரம் பொருளின் ஒரு சிறு கூறு இணைந்திருப்பதே மனிதம் இம்மானுடம். இயக்க சக்தி, இயங்கு சக்தி ல்ர்ற்ங்ய்ற்ண்ஹப்-ந்ண்ய்ங்ற்ண்ஸ்ரீ உடலும் உடலைச் சார்ந்த அனைத்து உறுப்புகளும் இயங்கும் சக்தியாயும் உள்ளன. உடற் தொகுதியும் இணையும்போது மனித வாழ்கை துவங்குகிறது. ஆன்மா வழி நடத்துகிறது.
எனினும் ஆன்மா என்பது பல்வேறு கன்மாக்களால் கட்டுண்டிருப்பதால் அதனின்றும் விடுதலை பெற்று இறையோடு இணைவதற்காக சித்தம் இயங்குவது. சித்தம் என்பது மனத்தின் எஜமானன். மனம் என்பது புத்தியின் தீவிர விசுவாசி. புத்தி என்பது பழக்க வழக்கங்களின்றும் தோன்றும் தெளிந்த அறிவு. அறிவு என்பது புலன்களால் உருவாக்கப்படும் புதுப்புது நுகர்வு உணர்வுகளாய் மாறி வினையாற்ற செயல்பட வைப்பது. அச்செயல்பாடுகளே விளைவுகள் என்ற பாவ புண்ணிய பரிந்துரைகளாய்ப் பிறவியினைத் தொடர்ந்து தோற்றுவிக்கக் காரணமாய் அமைவது. இவ்வாறு பிறவிப் பெருநோய் பற்றாதிருக்க யாது செய்வது.
""பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்
மீண்டும் மீண்டும் பிறவாதிருக்க பல்வேறு உத்திகள் இருப்பதாய்க் கண்டு அதன் வழி நடந்து வெற்றி பெற்று பிறர்க்குச் சொன்ன அருளாளர்கள் முக்கியமான இரண்டு வழிகளே நிச்சயமான வழிகள் எனக் கூறியுள்ளார்கள்.
1. எத்தகையவர்க்கும் பெறத்தக்கதாய் பாமரர்க்கும் கூடுகின்ற பக்திநெறியும்,
2. ஏனைய பிறர்க்காய் யோக நெறியும் சிறந்ததெனச் சொல்லியுள்ளனர்.
யாவற்றிலும் நிறைந்திலங்கும் இறைவனை நம் பாங்கிலேயே நம்மைப்போலவே அவ்உருவையும் அவன் திருப்பெயர்களையும் நினைந்து போற்றியும், கூவியும் அவன் நினைவாகவே, நற்பண்பு காத்து வழிபடுதல் பக்தி நெறி எனவும், மற்றொரு வகையான யோக நெறி எனப்படும் யோக ஞானப் பயிற்சியும் ஆகும். ஏனைய உயிரிகளைப் போல அல்லாது இம்மனிதன் தன் உடல் மூலம் பேராற்றலை வெளிப்படுத்தி மன ஆற்றலைச் சிறப்பித்து இறையாற்றலை இறையினை உணர்ந்து அவனோடு கலந்திருத்தலாகும். அதுவே யோகம் - இணைதல் என்ற பாங்கு.
யோகம்
உளவியல் மூலம் அகத்தூய்மை, புலன் கட்டுக்கோப்பு, ஆழ்மனத்திடவியல் எனும் நீள் நினைவு நோற்றல் தியானம் இதனோடு இணைந்த பிராணாயாமம் என்ற உயிராற்றல் சக்தியாகும். நம் உடலில் முனிவர்களால் கண்டறியப்பட்ட ஆறு ஆதாரங்களில் வழியே ஆற்றலை பயணிக்கச் செய்து இறுதியில் உடலுணர்வு கடந்த நிலை எய்தி வான் சக்தியினை இஞநஙஐஇ உசஉதஎவ ஊடகமாக்கி மனம் உறைந்து இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையே ஆகும்.
சௌந்தர்ய லஹரி
தாள் இணைக் கமலம் ஊறித்
தரும் அமிழ்து உடலம் முழ்க
மீள அப்பதங்கள் யாவும்
விட்டு முற் பழைய மூலம்
வாள் அரவு என்ன ஆகம்
வளைத்து உயர் பணத்தினோடு
நானும் மையக்கல் கண்துஞ்சும்
ஞான ஆனந்த மின்னே
வீரைக் கவிராஜ பண்டிதர்
ஆயிரம் இதழ்த் தாமரையில் சிவனுடன் ஐக்கியப்பட்டுள்ள உன் இணையடி மலர்ப்பாதத் தினின்று ஊறிப்பெருகும் அமுதம் உடலில் உள்ள நாடிகள் வழியே பரவ வேண்டும். அத்தாமரை பதத்தினின்று விட்டு இறங்கி மூலாதாரத்தை அடைந்து ஒளிபொருந்திய பாம்பு போன்று உடல் வளைத்து மூன்றரை சுற்றாக பாம்பின் தன் படத்துடன் கூடிய குண்டலினி வடிவாகச் செய்து கொண்டு நாளும் கண்ணுறங்கும் அங்கையற் கண்ணியே! ""ஞான ஆனந்த ஒளியே என சௌந்தர்ய லஹரியில் வரும் இப்பாடலில் வீரைக்கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.
குறிப்பாக மதுரைத் திருவாலாவாய் என்ற இத்திருக்கோவிலில் இறுதிக் கால பூசையாக பள்ளியறை நிகழ்வுத் தத்துவம் கூறப்புகின் மனித உடலில் அமைந்துள்ள நீள்முதுகுத் தண்டின் ஆறு ஆதாரங்கள் என்ற ஆறு சக்கர தளங்கள் 1. மூலாதாரம் 2. ஸ்வாதிஷ்டானம்
3. மணிபூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. ஆக்ஞை என்பனவாகும். இவற்றினில் ஒவ்வொரு ஆதாரத்துவக்கத்தை ஆதி என்றும் ஆதார முடிவினை அந்தம் என்றும் இவ்வாறாய் ஆறு தளங்களுக்கு பன்னிரெண்டு தளங்கள் என பெருக்கிக் கூறுவதை துவாத சாந்தப் பெருவெளி என்று கூறுவர். மதுரை திருத்தலத்திற்கு துவாதசாந்தபுரி எனப் பெயர் பெற்றிருப்பதோடு, துவாத சாந்த மூர்த்தியான சோம சுந்தரப் பெருமானும் மஹா சோடஷியான அங்கையற்கண்ணி அம்மையும் ஐக்கிய தருணத்தின்போது அன்பர்கள் வழிபடுகிறார்கள். ஆயிரம் இதழ்த் தாமரை பீடத்தில் துரியாதீன நிலையில் சிவத்தோடு சக்தி ஐக்கியமாவதையே பள்ளியறைத்தத்துவம் வெளிப்படுத்துகிறது. யோகப்பயிற்சி நிலை பற்றி உணர்ந்தோர்கள் இதன் சிறப்பினை இவ்வாறு உணர்வர்.
""துவாதசாந்தப் பெருவெளியில் துரியம் கடந்த பரநாத மூலத்தளத்து முளைத்த முழுமுதலே என குமரகுருபரர் யோகம் உணர்ந்த நிலையில் கூறுகிறார். மீனுக்கு இமையா விழி என்பர்.
ஏனெனில் அதற்கு இமைக்க இமைகள் இல்லை. மீன் கண் திறந்த படி உறங்கும் சமயம், குண்டலினிப் பாம்பு படமெடுத்த நிலையில் படத்தை உள்ளவாறு சுருட்டி உறங்குவதாகும். எந்த நேரத்திலும் சாதகன் தன் பிராணாயாம யோகநெறிப் பயிற்சியின் மூலம் தன்னை அழைப்பான் என்றெண்ணியவாறு இயல்நிலையினின்றும் படமெடுக்கும் கால அவகாசம் கூட பக்தன் காத்திருக்கலாகாது எனக் கருணை கொண்டு ஆதார சக்கரங்களின் வழியே மேலேறிக் கீழறங்கத் தயார் நிலையில் படமெடுத்தபடி இருப்பதாகும். உறங்காமல் உறங்கி நம்மையெல்லாம் எப்போதும் காத்தருளும் அங்கையற் கண்ணி பள்ளியறைக்கும் உறங்கச் செல்வது போல புறத்தோற்ற நிகழ்வுகள் காணப்படினும் உறங்காத அவள் கண்கள் அவனியைக் காப்பதற்கே என்பதுதான் தத்துவப் பிண்ணனிக் கொண்ட பள்ளியறைக் கோலமாகும்.