பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரியாற் றில் கரைக்கப்பட்டன. குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி, பெரும்பாலான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
ஒரு நாள், மூன்று நாள், ஐந்து நாள், ஒரு வாரம் என, கொலு வைக்கப்பட்டு, காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். நேற்று (செப்., 13ல்), காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் குறைந்த அளவில் கரைக்கப்பட்டன. இதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி கூறுகையில், குமாரபாளையத் தில், 32 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிலைகளை காவிரி ஆற்றில் கரைக்க, வரும், 16 இறுதி நாளாகும். அன்று, பல ஊர்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.