பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
சேலம்: கோவிலில், மர்ம ஆசாமிகள் வைத்த உலோக சிலை, திருடப்பட்டதா என, போலீசார் விசாரிக்கின்றனர். சேலம், இரண்டாவது அக்ரஹாரத்தில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, துணியில் சுற்றப்பட்ட நிலையில், சிலை இருப்பதாக, கோவில் பாதுகாவலர் பாஸ்கரன், சுகவனேஸ்வர் கோவில் நிர்வாக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். உதவி கமிஷனர் தமிழரசு உள்ளிட்டோர், சிலையை நேற்று (செப்.,13ல்) காலை எடுத்து சென்றனர். உலோத்தாலான அர்த்தநாரீஸ்வரர் சிலை, 2.17 கிலோ எடை, 30 செ.மீ., உயரம், 12 செ.மீ., அகலத்தில் இருந்தது. டவுன் போலீசில், தமிழரசு புகாரளித்தார். அதில், ஏதாவது கோவில் திருடப்பட்ட சிலையா? அல்லது வீடுகளில் வைத்து வணங்கப்பட்டதா என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கோவில் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை, போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.