நத்தம் புன்னப்பட்டியில் அரசரடி வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2018 12:09
நத்தம்: புனப்பட்டி மற்றும் காட்டு வேலாம்பட்டி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. புன்னப்பட்டி அரசரடி வலம்புரி விநாயகர் கோயிலில் நேற்று முன்தினம் (செப்.,13ல்) மாலை கணபதி ஹோமம், அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ரக்க்ஷாபந்தனம், மகா பூரணாஹூதி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (செப்., 14ல்) காலை மண்டப சாத்தி, கோபூஜை, லெட்சுமி பூஜை என இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பகலில் அன்னதானம் நடந்தது.
காட்டு வேலாம்பட்டி சித்திவிநாயகர் கோயிலில் செப்., 12 அன்று மாலை முதற்கால யாக பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் செப்., 13 காலை புண்ணியாகவாசனம், நவக்கிரஹ ஹோமம் என 2 கால யாக பூஜைகள் நடந்தன. மாலையில் பாலிகா பூஜை உள்ளிட்ட மூன்றாம் காலயாக பூஜைகளும் நடந்தன. நேற்று செப். 14ல் நான்காம் கால யாக பூஜைக்குப்பின், கும்பாபிஷேகம் நடந்தது.