பதிவு செய்த நாள்
15
செப்
2018
02:09
கோவை;விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற இருப்பதால், கோவையில் இன்று செப்.,15ல் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோவை மாநகரில், பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம் இன்று செப்.,15ல் பிற்பகல் 1:00 மணிக்கு துவங்குகிறது. குனியமுத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை ஊர்வலம், தர்மராஜா கோவிலில் இருந்து புறப்பட்டு, பாலக்காடு சாலை வழியாக சென்று, குறிச்சி குளத்தில் கரைக்கப்படுகிறது.
போத்தனூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், சாரதா மில் சாலையில் ஊர்வலம் துவங்கி, சங்கம் வீதியில் ஒன்று கூடி, சுந்தராபுரம் வழியாக குறிச்சி குளத்தில் கரைக்கப்படுகிறது.இதனால், இந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* பாலக்காடு ரோட்டில் இருந்து, உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், கோவைப்புதூர் பிரிவில் இடதுபுறம் திரும்பி, குளத்துபாளையம் வழியாக ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு வந்து, வலதுபுறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக, உக்கடம் செல்ல வேண்டும்.
* உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம், போத்தனூர் புதுப்பாலம், ஜி.டி., டேங்க், செட்டிபாளையம் சாலை வழியாகஈச்சனாரி சென்று, பொள்ளாச்சி சாலையை அடைய வேண்டும்.
* பொள்ளாச்சி சாலையில் இருந்து, சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்கள், ஈச்சனாரி பிரிவிலிருந்து வலது பக்கம் திரும்பி, செட்டிபாளையம் சாலையை அடைந்து, இடது பக்கம் திரும்பி, போத்தனூர் புதுப்பாலம் வழியாக, போத்தனூர் கடை வீதி , குறிச்சி பிரிவு வந்து ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
* பொள்ளாச்சி சாலையில் இருந்து, சுந்தராபுரம் வழியாக பாலக்காடு ரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள், பொள்ளாச்சி சாலை மகாலட்சுமி கோவில் சந்திப்பில், இடது பக்கம் திரும்பி, மதுக்கரை மார்க்கெட் சாலையை அடைந்து, பிள்ளையார்புரம் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி, சுகுணாபுரம் வழியாக பாலக்காடு சாலையை அடைய வேண்டும். விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, பிற்பகல் 1:00 முதல் இரவு 10:00 மணி வரை, நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வரும், அனைத்து கன ரக வாகனங்களும், நகருக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும்.