Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி வலம்புரி விநாயகர் ... உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் 228 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
மதுரையில் 228 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

16 செப்
2018
12:09

மதுரை: விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று 228 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூன்று முதல் ஒன்பது  அடி உயரமுள்ள 228 விநாயகர் சிலைகளை, கீழமாசி வீதி மொட்டை விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு வந்தனர். அங்கு பூஜை நடந்தது. இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம்  ஊர்வலத்தை மாலை 5:15 மணிக்கு துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அழகர்சாமி, இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளக்குத்துாண், தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, சிம்மக்கல், திருமலைராயர் படித்துறை வழியாக இரவு 9:35 மணிக்கு வைகை கல்பாலத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. இரவு 7:10 முதல் 7:25 மணிவரை மிதமான  மழை பெய்தது. இதை பொருட்படுத்தாமல் உற்சாகத்துடன் பக்தர்கள் ஊர்வலத்தை தொடர்ந்தனர். தெற்குமாசி வீதியில் சிறிது நேரம் நின்று செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர்,ஏற்கனவே பல சிலைகள்  முன்னால் சென்றுவிட்டன. தடையின்றி தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும்,எனக்கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar