புதுச்சேரி : வில்லியனூர் பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் இன்று நடக்கிறது. வில்லியனூரில் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தை மாதம் 3ம் வெள்ளியை முன்னிட்டு, 23ம் ஆண்டு திருக்கல்யாண மகோற்சவம் இன்று நடக்கிறது. காலை 9 மணிக்கு, பெரு மாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு பெருமாள் - தாயார் உள்புறப்பாடும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து, பெருமாள் - தாயார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவில், பங்கேற் கும் பெண்களுக்கு மாங்கல்ய சரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.