பதிவு செய்த நாள்
03
பிப்
2012
11:02
வல்லநாடு:வல்லநாட்டிலுள்ள சித்தர் சாது சிதம்பர சுவாமிகளின் நிø னவு ஆலயத்தில் உள்ள அரு ள்ஆனந்த செந்தில் விநாயகர் கோயிலின் சன்மார்க்க திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா வரும் 6ம் தேதி நடக்கிறது.வல்லநாடு பாறைக்காடு கிராமத்தில் உள்ள அருள் ஆறுதல் இல்லத்தில் சித்தர் சாது சிதம்பர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அருள் ஆனந்த செந்தில் விநாயகப் பெருமாள் ஆலயம் தற்போது கருங்கற் கோயிலாகவும் மற்றும் சாது சிதம்பர சுவாமிகளின் நினைவு ஆலய மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சன்மார்க்க திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற இருக்கின்றது. வரும் 5ம் தேதி காலை 5 மணிக்கு தியாகச் சாலையில் திருப்பள்ளி எழுச்சி மற்றும் அகவல் பாராயணமும், நண்பகல் 2 மணிக்கு தியாகசாலை பூஜைகள் ஆரம்பம் மற்றும் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல், வள்ளலார் அருளிய அகண்ட அகவல் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோபூஜை, மாலை 6 மணிக்கு தியாக சாலையில் சன்மார்க்க முறைப்படி கணபதி ஹோமம், 108 கலசபூஜை, நவக்கிரஹ தீப ஜோதி வழிபாடுகள் நடக்கிறது.இதனைத் தொடர்ந்து 7 மணிக்கு நடைபெறும் கஜபூஜையில் சிவபுராணம், திருவருட்பா பாடப்படுகிறது. இரவு 8 மணிக்கு சன்மார்க்க சமபந்தி விருந்து நடக்கின்றது. வரும் 6ம் தேதி இதனையடுத்து அதிகாலை 3 மணி க்கு தியாக சாலையில் அக ண்ட அகவல், 5 மணிக்கு கோபூஜை 5.30 மணிக்கு கஜபூஜைகளும் நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் அருள் ஆனந்த செந்தில் விநாயகப் பெருமான் கோபுரத்திற்கு சன்மார்க்க திருக்குடமுழுக்கு நன்னீராட்டு நடைபெறும். காலை 7 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு மகா அபிஷேகமும், கூழ்பூஜையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு சன்மார்க்க சமபந்தி விருந்தும், நண்பகல் 1 மணிக்கு தைபூச வழிபாடு, அன்னம் பூஜையும், நண் பகல் 2 மணிக்கு ஜோதிவழிபாடும், 6 மணிக்கு மங்கலபூஜையும், இரவு 7 மணிக்கு சன்மார்க்க சமபந்தி விருந்தும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சித்தர்சாது சிதம்பர சுவாமிகள் தொண்டர்குலம் மற்றும் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.