மூணாறு: மூணாறில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கன்னியாற்றில் கரைக்கப்பட்டன.
மூணாறில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து ஒற்றுமை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி 18 ம் ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. அதற்காகமூணாறு, கன்னிமலை எஸ்டேட், நடையார் உட்பட ஆறு இடங்களில் கடந்த 13ம் தேதி முதல் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ,நேற்று (செப்.,16ல்) மூணாறில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மூணாறு நகரில் வலம் வந்த சிலைகள்,கன்னியாற்றில் கரைக்கப்பட் டன.ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் மதியழகன், செயலாளர் ரமேஷ்,பொருளாளர் கந்தகுமார் செய்தனர்.