பதிவு செய்த நாள்
18
செப்
2018
01:09
திண்டுக்கல்:திண்டுக்கல், பழநி, வடமதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று (செப்.,17ல்) இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.திண்டுக்கல்லில் மாவட்ட தலைவர் தீனத்தயாளன் தலைமை வகித்தார். மாநில அமைப்புக்குழு தலைவர் பொன்னுச்சாமி, வெள்ளாளர் முன்னேற்ற கழக தலைவர் ஜோதிமுருகன், பார்வர்டு பிளாக் மாநில பொது செயலர் ஜெயராம் பங்கேற்று பேசினர். 19 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோட்டைக்குளத்தில் கரைக்கப்பட்டன.
கொடைக்கானல்: கொடைக்கானலில் மாநில இளைஞரணி செயலாளர் குமரன் தலைமை யேற்றார். நகர தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார், நகர பொருளாளர் சக்திதரன் வரவேற்புரையாற்றினார். நாயுடுபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து அலங்கரிக் கபட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் துவங்கியது. பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள விநாயகர் ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
வடமதுரை: வடமதுரை ஒன்றியத்தில் மோர்பட்டி, நொச்சிகுளத்துபட்டி என பல ஊர்களிலும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இவையனைத்தும் நேற்று (செப்.,17ல்)தும்மலக்குண்டு ரோட்டிலுள்ள நரிப்பாறை குளத்தில் கரைக்கப்பட்டன.
முன்னதாக விழாவில் ஒன்றிய தலைவர் நாகராஜன், துணைத்தலைவர் மருதமுத்து தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய பொது செயலாளர்கள் வடிவேல், செல்வம் பேசினர்.பழநி: பழநியில் இந்துமக்கள் கட்சி, சிவசேனா, அகில பாரத இந்துமகா சபா உள்ளிட்டவைசார்பில்,நேற்று (செப்.,17ல்) நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பாதவிநாயகர் கோயிலுக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து கொண்டு செல்லப் பட்டு, சண்முகநதியில் கரைக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே ஓட்டலில் சாப்பிடுவது தொடர்பாக ஊர்வலம் வந்த சிலர் அவர்களுக்குள் தகராறு செய்தனர். அவர்களில் 3பேரை போலீசார் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.