பரமக்குடி: பரமக்குடி நந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஊறி இழுக்கப்பட்டது. அப்போது உறிஅடிப்பவர்களை மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகப்படுத்தினர். பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்குஉற்ஸவர் கிருஷ்ணர் திருக்கோலத்தில் அலங்காரமாகி பூப்பல்லக்கில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். இதில் யாதவர் வர்த்தக சங்கம் நந்தகோபால கிருஷ்ணர் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமு, கண்ணன், கோபிநாதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.