ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைதியாக முடிந்த விநாயகர் சதுர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2018 02:09
ஸ்ரீவில்லிபுத்தூர்:எவ்வித பிரச்னையுமின்றி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக முடிந்ததால், விருதுநகர் மாவட்ட போலீசார் மகிழ்ச்சியடைந்தனர்.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டுவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு பல நிபந்தனைகளை மாவட்ட போலீஸ் நிர்வாகம் விதித்தது. விநாயகர் சிலை வைத்திருந்த இடங்களில் சிலைகளை கைப்பற்ற போலீசார் முயன்றதில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருபுறம் போலீசார் கடுமைகாட்ட, மறுபுறம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தியே தீருவோம் என ஹிந்துமுன்னணியினர் உறுதியாக நிற்க, கடைசியாக போலீசார் இறங்கி வந்தனர்.
இதையடுத்து அருப்புகோட்டையில் துவங்கி ராஜபாளையம் வரை பல நகரங்களில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டும் மழையிலும் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். ஒரு வழியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் எவ்வித பிரச்னையின்றி நடந்ததால் போலீசார் மகிழ்ச்சியடைந்தனர்.