திருப்புத்தூர்: திருப்புத்தூரில் தமிழ்நாடு விஸ்வகர்மா சங்கத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.தச்சுத் தொழிலாளர் சங்க தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார்.
விஸ்வகர்மா கைவினைஞர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் காளிமுத்து வரவேற்றார். திருப்புத்தூர் எம்.எல்.ஏ.,பெரியகருப்பன் பங்கேற்றார்.தமிழ்நாடு கைவினைஞர் சங்க மாவட்டத் தலைவர் தெய்வசிகாமணி, மாவட்டச் செயலாளர் ஞானசுந்தரம், மாவட்டப் பொருளாளர் முத்துராமலிங்கம், காரைக்குடி தச்சுத் தொழிலாளர் சங்க தலைவர் வீரப்பன், எம்.கே.டி.பேரவை மாநிலத்தலைவர் ஜம்புகேஸ்வரன் பேசினர். முன்னதாக திருத்தளிநாதர் கோயிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு சங்கக் கட்டடத்திற்கு சென்றது. பின்னர் விஸ்வகர்மா திருவுருவப் படத்திற்கு பூஜை செய்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.