முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் விஸ்வகர்மா ஜந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் 14 ஆம் ஆண்டு விழா நடந்தது. விஸ்வகர்மா ஜக்கிய சங்கத்தலைவர் நல்லாசிரியர் பாலகுருசாமி தலைமை வகித்தனர்.சுந்தர விநாயகர்க்கு கணபதிஹோமம், விஸ்வகர்மா உற்ஸவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் கோவிலில் இருந்து பேருந்து நிலையம்,முருகன் கோவில் வழியாக உற்சவமூர்த்தி திருவீதி உலா வந்தனர்.மாலையில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. அன்னதானம் நடந்தது.