பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
கோத்தகிரி: கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
கோத்தகிரி நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், அனுமன் சேனா சார்பில், 75 சிலைகள் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்டன. பூஜிக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் துவங்கிய ஊர்வலத்துக்கு, அனுமன் சேனா மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகி உப்பட்டி தங்கம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சிட்கோ ராஜேந்திரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், காம்பாய்கடை மற்றும் ராம்சந்த் வழியாக கொண்டு செல்லப்பட்டு, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் பேண்டு வாத்தியம் முழங்க, தொண்டர்கள் ஒம் காளி; ஜெய் காளி என கோஷம் எழுப்பி, நடனமாடி சென்றனர்.