பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
காஞ்சிபுரம்:உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், மாவட்ட நீதிபதிகள் நேற்று செப்., 17ல், ஆய்வு நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலையத் துறை பராமரிப்பில், 1,389 கோவில்கள் உள்ளன. இவை, பட்டியல் சார்ந்தவை, பட்டியல் சாராதவை என, பிரிக்கப்பட்டுள்ளன.பட்டியல் சாராத கோவில்கள், உதவி ஆணையர் கட்டுப்பாட்டிலும், பட்டியல் சார்ந்த கோவில்கள், இணை ஆணையர் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
கோவில்களில் உண்டி யல் வருமானம், கோவில் நிலங்கள், கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை பொறுத்து, பிரிக்கப் பட்டுள்ளன. இக்கோவில்களில், சுகாதாரம், வரவு - செலவு விபரங்கள், நிலங்கள் பராமரிப்பு, பக்தர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கோவில்களில், எப்போது வேண்டுமானாலும், நீதிபதி ஆய்வு நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமையிலான நீதிபதிகள் குழு, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று(செப்., 17ல்þ மாலை ஆய்வு செய்தது.
இக்குழுவில், மாவட்ட நீதிபதி கருணாநிதி, குற்றவியல் நீதிபதி மீனாட்சி, மாவட்ட உரிமை யியல் நீதிபதி முரளிகிருஷ்ணா ஆனந்தன் ஆகியோர் இருந்தனர். ஏகாம்பேஸ்வரர் கோவிலில் உள்ள அலுவலகம், மூலஸ்தானம், உள்பிரகாரம், வெளிபிரகாரம், உற்சவர் அறை போன்ற அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வுசெய்தனர். அடுத்து வரும் நாட்களில், காமாட்சி யம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் ஆய்வு நடைபெற உள்ளது.