Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ... மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்மண்!
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்மண்!

பதிவு செய்த நாள்

18 செப்
2018
06:09

காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், செம்மண் வைக்கப்பட்டுள்ளது. இதனால், மண் விற்பனை செய்வோர், கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும், என சிவாச்சாரியார்கள் கூறினர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது. இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இதில், நுாற்றாண்டு காலமாக, பக்தர்கள் தரும் பொருள் வைத்து, பூஜிக்கப்படுகிறது. என்ன பொருள் வைப்பதென்று, பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் கூறுவார். உத்தரவு பெற்ற பக்தர்கள் கோவிலுக்கு செல்வர். அங்கு பூ வாக்கு கேட்டு உறுதி செய்த பின், அவர்கள் கொண்டு செல்லும் பொருள், பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, முந்தைய பொருள் நீடிக்கும். இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை அல்லது நடக்கப்போவதை, முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தப்படுவதாக, அமையும் என்பது ஐதீகமாக உள்ளது. கடந்த ஜூலை, 6- முதல், செம்பு அம்பு வைக்கப்பட்டிருந்தது.   

இந்நிலையில் திருச்செந்துார் கோவில் அடிவாரம், பால்பண்ணை வீதியை சேர்ந்த மகாலட்சுமி, 45, என்பவரின் கனவில், செம்மண் வைக்க உத்தரவாகியுள்ளது. நேற்று முதல் பெட்டியில், செம்மண் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார்கள் கூறியதாவது: ஆண்டவர் உத்தரவு பெட்டியில், ஏற்கனவே மண் வைக்கப்பட்டபோது, நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. தற்போது மீண்டும் மண் வைக்கப்பட்டுள்ளதால், மண் சார்ந்த பிரச்னை ஏற்படும். அத்தொழிலில் ஈடுபட்டவர்கள், நெருக்கடியை சந்திக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 2வது முறையாக திருச்செந்துார் இதற்கு முன் வைத்திருந்த, செம்பு அம்பை, திருச்செந்துாரை சேர்ந்த கென்னடி, 51, என்ற பக்தர் அளித்தார். இரண்டாவது முறையாக, திருச்செந்துாரை சேர்ந்த பெண் பக்தர் கனவில் மண் வைக்க உத்தரவாகியுள்ளது. இதுகுறித்து மகாலட்சுமி கூறியதாவது: திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு, தினமும் காலை நேரத்தில் செல்வேன். சிவன்மலைக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் சென்றுள்ளேன். கடந்த, 11 இரவு, முருகன் கனவில் தோன்றிய சிவன்மலை முருகன், ‘என் சன்னதியில் உள்ள பெட்டியில், செம்மண் வை’ என்று சொல்லிவிட்டு மறைந்தார். அதன்படி செம்மண் அளித்தேன்.   
இவ்வாறு அவர் கூறினார்.

பொருளும்... செயலும்... :
கடந்த, 2015-ல் உத்தரவு பெட்டியில், கணக்கு நோட்டு  வைக்கப்பட்டபோது, மத்திய அரசு, கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக,  சட்டம் கொண்டு வந்தது. கடந்த, 2017 ஜன.,10ல் இரும்பு சங்கலி வைக்கப்பட்டது.  அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறை தண்டனை பெற்றார்.  நடப்பாண்டு ஏப்.,21 முதல் சங்கு வைக்கப்பட்டபோது, ஆங்காங்கே மழை பெய்தது.  கடைசி பொருளாக, செம்பு அம்பு வைத்தபோது, சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று மார்கழி மாத கிருத்திகை ஒட்டி மூலவருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு விழா ... மேலும்
 
temple news
பெங்களூரு; ம.ஜ.த., – எம்.எல்.சி., சரவணாவின் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளன்று, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. கோடி ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு, ‘ரோப் கார்’ அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லாததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar