கம்பம்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பம்பை நதியை சீரமைக்க ரூ. 25.46 கோடியில் திட்டவரவை தயாரித்து டாடா நிறுவனம் தேவசம் போர்டுக்கு அனுப்பியுள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சபரிமலையில் பம்பையின் உருவமே மாறியுள்ளது.சபரிமலையில் ஏற்பட்ட பாதிப்புக்களை சீரமைக்க தேவசம் போர்டு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக டாடா புராஜக்ட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவன பொறியாளர் குழு, பம்பை நதியை சீரமைக்க ரூ. 25.46 கோடியில் மதிப்பீடு தயாரித்து தேவசம்போர்டுக்குஅனுப்பி உள்ளது.பம்பை நதி, கரை களில் மலைபோல மணல் குவிந்துஆழம் குறைந்துவிட்டது. ஆனால் மணலை அகற்ற கேரள வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.