பதிவு செய்த நாள்
19
செப்
2018
11:09
ராமநாதபும்: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில், தர்கா சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஏர்வாடியில் வெட்டன்மனை, நாச்சியம்மைபுரம், சின்ன ஏர்வாடி, கல்பார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (செப்.,18), விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
ஏர்வாடி சுல்தான் செய்யது பாதுஷா நாயகம் தர்கா அருகே ஹக்தார்கள், முன்னாள் பொது மகாசபை தலைவர் துல்கருணை பாட்ஷா லெவ்வை, விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்தும், துண்டு போர்த்தியும் மரியாதை செய்தனர்.பின், சின்ன ஏர்வாடி கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், கடலில் கரைக்கப்பட்டன. ஏர்வாடியில், விநாயகர் ஊர்வலம் மற்றும் அம்மன் கோவில் முளைப்பாரி விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு ஆண்டும், ஏர்வாடி தர்கா சார்பில், முஸ்லிம்கள் மரியாதை செய்து வருகின்றனர்.