பாதுார் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2018 11:09
உளுந்துார்பேட்டை: பாதுார் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் தங்க கருட சேவை நடந்தது. உளுந்துார்பேட்டை அடுத்த பாதுாரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 16ம தேதி 42ம் ஆண்டு தங்க கருட வாகன மகோற்சவ விழா நடந்தது. அதனையொட்டி அன்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாத சேவை, மூலவர் விஸ்வரூப தரிசனம், காலை 8:00 மணிக்கு நாச்சியார் திருக்கோல திருப்பல்லக்கு, காலை 10:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு 11:00 மணிக்கு வேதபாராயணங்களுடன் பஜனை கோஷ்டிகளுடன் பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருவீதியுலா புறப்பாடு நடந்தது. இன்று(19ம் தேதி) மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், நாளை(20ம் தேதி) காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.