பதிவு செய்த நாள்
19
செப்
2018
11:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை, மகிஷாசுரமர்த்தினி குடைவரை துர்க்கை சிற்பத்திற்கு, மஞ்சள், குங்குமம் இட்டு வழிபாடு நடத்தப்பட்டது.மாமல்லபுரம், கடற்கரைக்கோவில் வளாகத்தை ஒட்டி, தாழ்வான கடற்கரை பகுதியில், பாறைக்குன்றில், மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பம் உள்ளது. பாறைக்குன்றின் உச்சிப்பகுதி, சிறிய கருவறையில், எட்டு கைகளுடன் துர்க்கை சிற்பம்; வெளிப்புறம், சிங்கங்களுடன் தூண்கள்; மகிஷாசுரனை தாக்கும் சிங்கம் என, வடிக்கப்பட்டுள்ளது. கடலின் பருவமாற்ற நீரோட்ட போக்கிற்கேற்ப, டிச., துவங்கி சில மாதங்கள், இச்சிற்பத்தை சுற்றி, கடல்நீர் சூழும். ஜூலை துவங்கி, சில மாதங்கள், கடல் உள்வாங்கி, சிற்ப பகுதியில் மணற்பரப்பு உருவாகும்.கடல்நீர் சூழும்போது, சிற்ப பகுதிக்கு செல்ல இயலாது. மணற்பரப்பு உருவாகியுள்ள தற்போது, பக்தர்கள், துர்க்கை சிற்பத்திற்கு, மஞ்சள், குங்குமம் இட்டு வணங்குகின்றனர்.