ஸ்ரீவி.,யில் மழை பெய்யாதது ஏன் பிரசன்னத்தில் புது தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2018 11:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாதது ஏன் என்பது குறித்து பிரசன்னம் பார்த்ததில் புது தகவல்கள் வெளியாகின.
ஆன்மிக நகரமான ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழைபெய்வதில்லை. புயல் நேரங்களில் கூட கண்மாய்களில் போதிய நீர்வரத்து இல்லை.
நிலத்தடி நீர்மட்டமும் இறங்குமுகமாக உள்ளது. இந்நிலையில் ஸ்ரீவி.,நகர்வளர்ச்சி இயக்கத்தின் சார்பில் ஆண்டாள் கோயிலில் மழைவேண்டி விராடபர்வம் வாசித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதன்தொடர்ச்சியாக பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடந்தது. பிரசன்னம் பார்த்த ஸ்ரீவத்சன் கூறியதாவது: வனப்பகுதியில் தெய்வ ஆளுமை இடங்களின் அருகில் பலரின் உடல்கள் அடக்கம் செய்யபட்டு சாந்தியடையாமல் உள்ளது. பல கோயில்களில் தெய்வங்களுக்குரிய பூஜைகள் முறையாக நடக்கவில்லை. வெளியிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கோயிலில் வினியோகிக்கபடுகிறது. கோயில் மூலஸ்தானங்கள் சுத்தமாக இல்லை.
சிவனுக்கு மிளகுசாதம் படைக்கவில்லை. கோயில் திருவிழா உற்சவர்கள் வாகனங்களில் குறைபாடுகள் உள்ளது. கொடியேற்றம், வீதியுலா போது தனிமனிதர்களுக்காக இறைவன் காக்க வைக்கபடுகிறார்கள். ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஒரு ரூபாயவாது பெற்று வருணஜெபம் நடத்தினால் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது,என்றார்.