திருவாடானை: திருவாடானை வடக்குத்தெரு முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 18)ல் நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். நேற்று (செப்., 19ல்) காலை பெண்கள் முளைபாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். அன்னதானமும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.