பதிவு செய்த நாள்
20
செப்
2018
12:09
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகப் பெருமாள் கோவில்களில், மாவட்ட முதன்மை நீதிபதி நேற்று செப்., 19ல் ஆய்வு மேற்கொண்டார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பக்தர்களுக்கான வசதி, பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, அந்தந்த மாவட்ட நீதிபதிகள், முக்கிய
கோவில்களில் ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பி வருகின்றனர்.
அவ்வகையில், மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, வீரராகப்பெருமாள் மற்றும் விஸ்வேஸ் வர சுவாமி கோவில்களில் நேற்று (செப்., 19ல்) ஆய்வு மேற்கொண்டார். அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்சினி வரவேற்றார். கோவில் வளா கம், வசந்த மண்டபம், சோபன மண்டபம், தீர்த்தக்குளம், மடப்பள்ளி, கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை, ஆய்வு செய்தார்.
நந்தவனத்தை பார்வையிட்ட அவர், பூச்செடிகளுக்கு மத்தியில் புதர் வளராமல் பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். சிசிடிவி கேமரா, ஆர்.ஓ., குடிநீர் வசதி போன்ற ஏற்பாடுகளை
பாராட்டியதுடன், கோவில் வளாகம், இதேபோல் தினமும் தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.மாவட்ட கோர்ட் மேலாளர் திருநாவுக்கரசு, கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) மணிகண்டன் மற்றும் பலர் பங்கேற்றனர்.