பதிவு செய்த நாள்
21
செப்
2018
11:09
டேராடூன்: பசுவை, ராஜமாதா என அறிவிக்கும் மசோதா, உத்தரகண்ட் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. உத்தரகண்டில் பசுவை ராஜமாதாவாக அறிவிப்பதற்கான மசோதா மீதான விவாதம், சட்டசபையில் நடந்தது. இதைத் தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. இது குறித்து, அம்மாநில கால்நடை துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ரேகா ஆர்யா கூறியதாவது:ஆளும் மற்றும் எதிர்கட்சியினர், பசுவின் மகத்துவத்தை அறிந்துள்ளனர். மத நுால்களில், பசுவின் உடலில், 33 கோடி, தேவ - தேவதைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மக்கள், பசுவை வணங்குவதுடன், வாழ்வாதாரமாகவும் வைத்துள்ளனர். பசுவை ராஜ மாதாவாக அறிவித்ததன் மூலம், அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பசு வதை தடுக்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பசுவை, ராஜமாதா என அறிவித்த முதல் மாநிலம் என்ற பெருமையை, உத்தரகண்ட் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.