மேட்டுப்பாளையம்: தென்திருமலையில் பிரமோற்சவ தேரோட்டம் நேற்று நடந்தது; ஏராளமான பக்தர்கள் தேர் இழுத்தனர். மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலையில் வேங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. வருடாந்திர பிரமோற்சவம் விழா, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மலையப்ப சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு அலங்காரம் செய்து தேரில் ஸ்ரீதேவி, பூதே வியுடன் மலையப்ப சுவாமி தேருக்கு எழுந்தருளினார். 8:15க்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு ரதவீதிகள் வழியாக, வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.