நாளை புரட்டாசி சனி : திருவண்ணாமலையில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2018 11:09
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி முன்னிட்டு, நாளை(செப்.22) அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.தென்திருப்பதி என்றழைக்கபடும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம் வெகுசிறப்புடன் நடப்பது வழக்கம். இந்தாண்டு நாளை முதல் புரட்டாசி சனி உற்சவங்கள் துவங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு நடைதிறக்கபட்டு திருமஞ்சனம், 5:30 மணிக்கு காலசாந்தி, 12:30 மணிக்கு உச்சிகாலம், இரவு 8:00 மணிக்கு சாயரட்சை பூஜைகள் நடக்கிறது. செப்.29ல் இரண்டாம் சனி, அக்டோபர் 6 மூன்றாம் சனி, 13ல் நான்காம் சனி, 20ல் ஐந்தாம் சனிக்கிழமை உற்சவங்கள் நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கபடுகிறது. பக்தர்களுக்கு போதிய குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு, வாகனங்கள் பார்க்கிங், மருத்துவம் மற்றும் தீயணைப்புத்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.