Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் கோயிலில் ரூ.3 கோடியில் ... சிவகங்கை நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் சிவகங்கை நாட்டரசன்கோட்டை பிரசன்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாரம் சஞ்சீவி பெருமாள் மலைக்கோயிலில் புரட்டாசி சனிவார திருவிழா இன்று (செப்., 22ல்) துவக்கம்
எழுத்தின் அளவு:
தேவாரம் சஞ்சீவி பெருமாள் மலைக்கோயிலில் புரட்டாசி சனிவார திருவிழா இன்று (செப்., 22ல்) துவக்கம்

பதிவு செய்த நாள்

22 செப்
2018
11:09

தேவாரம்:மூலிகை காற்று தழுவிச் செல்லும் கோடைக்கும் வற்றாத நீர் சுனை உள்ள கோம்பை சாலைமலை சஞ்சீவி பெருமாள் மலைக்கோயிலில் புரட்டாசி சனிவாரத் திருவிழா இன்று (செப்.,22ல்) துவங்குகிறது.

கோம்பையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சாலைமலை என்ற சஞ்சீவி மலை. இங்குள்ள சஞ்சீவி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிவாரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறும். புண்ணிய மாதமாக கருதப்படும் புரட்டாசியில் மலைமேலுள்ள பெருமாள் கோயிலுக்கு செல்வது சிறப்பு என்ற ஆன்மி நம்பிக்கை உள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருவர். காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடை திறந்திருக்கும். மதியம் அன்னதானம் வழங்கப்படும்.

மூலிகை மலை மலையடிவார அனுமன் கோயில் பூசாரி தங்கையா கூறுகையில்,எண்ணிய காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி தரும் புண்ணிய தலமாக பெருமாள் கோயில் உள்ளது. பருவமழை துவங்குமுன் சாலைமலையில் மேகம் கருக்கூடினால் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை இதுவரை பொய்த்ததில்லை. இந்த மலையில் ஏராளமான பச்சிலை மூலிகைகள் உள்ளன. இதன் மீது பட்டு வரும் காற்று நம்மை உரசி செல்லும் போது மனமும், உடலும் புத்துணர்வு பெறும், என்றார்.

ஜகஜால மலை

பரம்பரை மலைக்கோயில் பூசாரி விவேகானந்தன் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் சனியன்று கோயில் நடை திறக்கப்படும். திருக்கார்த்திகையன்று நடை திறக்கப்படும். புரட்டாசி 5வது சனிவாரத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்கும் அன்னதானம் நடக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்ற போது, இந்த மலையை சரியாக அளவு செய்ய முடியவில்லை. பலமுறை முயன்றும் முடியாததால், ஜகஜால மலை என்று பட்டப்பெயர் சூட்டப்பட்ட பெருமை பெற்றது, என்றார்.

செல்வது எப்படி: சின்னமனூர் அருகே புலிக்குத்தியிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் மலைக் கோயில் அமைந்துள்ளது. வாகனங்களை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar