Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) புதுவீடு கட்டுவீங்க! சொகுசு கார் வாங்குவீங்க! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குடும்பத்தில் மகிழ்ச்சி தொழிலில் வளர்ச்சி மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சனியால் தொல்லை ஓராண்டுக்கு இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
12:46

வெற்றி நோக்குடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் அக்.4ல் 7-ம் இடத்திற்கு செல்கிறார். இது மிக உயர்வான நிலை.  குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு 2019 பிப். 13ல் 2-ம் இடமான மிதுனத்திற்கு செல்வதால்  குடும்பத்தில்  பிரச்னை, தூரதேச பயணம் ஏற்படும்.  கேதுவால் 2019 பிப்.13க்குப் பிறகு  உடல்நலக்குறைவு  வரலாம். ஆனால் குருபார்வையால் பெரிய பாதிப்பு உண்டாகாது. சனி பகவான் தற்போது 8-ம் இடத்தில் இருப்பதும் நல்லதல்ல. முயற்சிகளில் தடைகளை உருவாக்குவார்.

இனி பொதுவான பலனைக் காணலாம். குருபகவானின் பார்வை பலத்தால் அஷ்டமத்துச்சனியின் கெடுபலன் ஓராண்டுக்கு ஏற்படாது. பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். திருமண முயற்சியில் நல்ல முடிவு கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். புத்தாடை, அணிகலன்கள் சேரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும் குருபகவானின் 5-ம் இடத்து பார்வை மூலம்  பொருளாதார வளம் மேம்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு குடும்ப பிரச்னை வரலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்  ஒன்று சேருவர். 2019 மார்ச் 10க்கு பிறகு வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாகும்.  கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஆகலாம். முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம்  ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.    

தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தைப் பாதுகாக்கவும். சீரான வருமானம் கிடைக்கும். விரிவாக்க முயற்சியில் அகலக்கால் வைக்க வேண்டாம்.  பணவிஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்ப்பது அவசியம். 2019 மார்ச் 10க்கு பிறகு வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். 8 ம் இடத்தில் சனி, கேது சேர்க்கை உண்டாவதால் 2019 மார்ச் 10க்குப் பிறகு ரிஸ்க் எடுக்கும் விஷயத்தில் இறங்க வேண்டாம். எதிரி தொல்லை வரலாம்.  

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்கப்  பெறுவர். சககலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  2019 மார்ச் 10க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல் ஆதாயம் கருதி தொண்டர்களுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டாம். விரும்பிய பதவி கிடைப்பதில் இழுபறி நிலையே நீடிக்கும்.

மாணவர்களுக்கு குருபலம் இருப்பதால் முயற்சிக்குரிய பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் விடாமுயற்சியால் வெற்றி பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.  ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு நண்பர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள்  நவீன முறைகளைப் பின்பற்றி அதிக விளைச்சல் காண்பர். வருமானம் உயரும். குறிப்பாக பழ வகைகள், நெல், கோதுமை, சோளம், மஞ்சள், பயறு வகைகள் போன்ற  பயிர்கள் மூலம் லாபத்தை காண்பர்.  புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு, விவகாரங்களில் சமரச பேச்சு மூலம் தீர்வு காண்பது நல்லது.

பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் உண்டாகும். விரைவில் குழந்தைப்பேறும் கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்வர். விலையுயர்ந்த நகை, பணத்தை கடனாகவோ, இரவலாகவோ யாருக்கும் தர வேண்டாம். பணிபுரியும் பெண்கள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். தொழில் புரியும் பெண்கள் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.  

2019 மார்ச் 10க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் வகையில் விரோதம் ஏற்படலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு   பொறுமை. உடல்நிலை திருப்தியளிக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு தீவிர கவனம் தேவை.

பரிகாரம்:
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
●  பவுர்ணமியன்று சிவனுக்கு வில்வார்ச்சனை

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (28.10.2019 முதல் 13.11.2020 வரை) »
temple
குருபகவான் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் ... மேலும்
 
temple
இப்போது குரு 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8ம் இடத்தில் ... மேலும்
 
temple
குருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்வது மிக உயர்வான நிலை. குருவின் 5ம் இடத்துப் ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்து 6ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை ... மேலும்
 
temple
குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ம் இடத்துக்கு செல்கிறார். இது மிக சிறப்பான நிலை. குருவால் கோடி நன்மைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.