Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - புயலுக்கு பின் அமைதி மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சனியால் தொல்லை ஓராண்டுக்கு இல்லை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (13.4.2022 முதல் 30.4.2023 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) புதுவீடு கட்டுவீங்க! சொகுசு கார் வாங்குவீங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
12:40

பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி  அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை தந்திருப்பார். இப்போது  8-ம் இடமான விருச்சிகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வைக்கு விசேஷ சக்தி உண்டு. வாழ்வில் கோடி நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.  அவர்  2019 மார்ச் 13ல் அதிசாரம் பெற்று  9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 2019 மே19 ல் மீண்டும் குரு விருச்சிகத்திற்கு திரும்புகிறார். சனிபகவான்  தனுசு ராசியில்  சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைபலத்தால் நன்மை கிடைக்கும்.  தொழிலில்  முன்னேற்றம் ஏற்படும்.   

இனி பொதுபலனைக் காணலாம்.

குருபகவான் விரய ஸ்தானமாகிய மீனத்தைப் பார்ப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் குருபகவானின் 7-ம் இடத்துப் பார்வை மூலம் வருமானமும் பெருகும். இதுவரை உள்ள சேமிப்பு மூலம் வீடு, நிலம் என அசையாச் சொத்து வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் கிடைக்கும் பணத்தில் சிலர் புதுவீடு கட்டவும் வாய்ப்புண்டு. நவீன சொகுசு கார் வாங்க யோகமுண்டாகும்.  குருபகவான் 2019 மார்ச் 13க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பணி, தொழில் ரீதியாக பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உருவாகும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு காணப்படும்.  விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  

பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு குறைவிருக்காது. விரும்பிய பணி, இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். 2019 மார்ச் 10க்கு பிறகு  வேலையின்றி இருப்பவர்களுக்கு புதிய வேலை  கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். சனியால் திடீர் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. அவரது 10-ம் இடத்துப் பார்வையால் இடையூறுகள் அடியோடு மறையும்.


கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.  2019 மார்ச் 10க்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல இடமுண்டு.  வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கும். எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், நாடக, சினிமா நடிகர்கள் நற்புகழ் பெறுவர்.  


மாணவர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.  மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.  2019 மார்ச் 10க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கூடுதலாக சொத்து வாங்க இடமுண்டு.   

பெண்கள் வசீகரமான பேச்சால் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். வீட்டுச் செலவு விஷயத்தில் சற்று சிக்கனத்தை பின்பற்றுவது நல்லது.  ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். கன்னியருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்:
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
●  வளர்பிறை சஷ்டியன்று முருகனுக்கு விரதம்

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (13.4.2022 முதல் 30.4.2023 வரை) »
temple
அசுவினி: செலவுகள் அதிகரிக்கும்செவ்வாயை ராசிநாதனாகவும், கேதுவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4ம் பாதம்: அதிர்ஷ்ட காலம்சுக்கிரனை ராசி நாதனாகவும், சூரியனை நட்சத்திர அதிபதியாகவும் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4 பாதம்: வீடு வாகனம் வாங்குவீர்கள்பாக்கிய ஸ்தானத்து குருவால் குடும்ப ஸ்தானத்தின் மீதான ... மேலும்
 
temple
புனர்பூசம் 4 ஆம் பாதம்: அறிவால் வெல்வீர்கள்மனதை ஆளக்கூடிய சந்திரனை ராசிநாதனாகவும், அறிவுக்காரகனான ... மேலும்
 
temple
மகம்: திடீர் பணவரவு ஆன்மாவிற்கும், கவுரவத்திற்கும் காரகனான சூரியனை ராசிநாதனாகவும், ஞானத்திற்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.