Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்கக்கூடை, தங்க மண்வெட்டி
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 18. மதுரைக் கோயிலின் திருவாபரணங்கள்
உரோமனியர் காசு மாலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
04:09

பண்டு தமிழகத்திற்குள் மேற்கிலுள்ள உரோம், கிரேக்கநாடுகளுக்கும் வாணிபத் தொடர்பு இருந்ததாக வரலாறு சொல்லும். கி.மு. 100ல் வாழ்ந்தவர் எனச் சொல்லப்பெறும் ""ஹோமர் என்னும் உலகப்பெரும் புலவர் முத்து, பட்டு, பொன், தேக்குமரம், யானைத்தந்தம் ஆகியவை தமிழகத்திலிருந்து கிரேக்க நாட்டுக்கு வந்தனவென தன்தம் நூலுற் குறிப்பிட்டுள்ளார். கிரேக்க, உரோமைய நாட்டு வணிகர்கள் நம் தமிழ்நாட்டுக்கு வந்து முத்து, கிராம்பு, ஏலம், மிளகு முதலிய பொருட்கள் வாங்கிச் சென்றனர் என்று நம் தமிழ்நூல்களும் சொல்கின்றனர். இவ்வித வாணிபத் தொடர்பால் உரோமனியர் வழங்கிய ஒரு காசுமாலை கோயிலில் உள்ளது. இது உரோமன் மொழி குறித்த தங்க உரோமன் 48 காசுகளை 50 தங்க மணிகளுடன் பட்டுக்கயிற்றில் கோர்த்துச் செய்தது. இதன் எடை 21 தோலா. இக்காசு மாலை இன்றும் புழக்கத்தில் உள்ளது. இது போல இன்னும் ஒரு வெளிநாட்டார் கொடுத்த காசுமாலையும் மீனாக்ஷி அம்மனுக்கு உண்டு. தென்னாட்டு மன்னர்களிடையே பூசல் இருந்த போது வாணிபத்திற்கென வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி அப்பூசலைப் பயன்படுத்தி 1790ல் மதுரை நாட்டைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். Englist east india company coinsஎன ஆங்கில மொழி பொதித்த 73 தங்கக் காசுகளால் ஆன ஒரு மாலையை அம்மனுக்கு வழங்கினர். இதன் எடை 6-8-0 தோலா. இஃது இன்றும் அம்மனுக்கு சாத்துவது உண்டு. இம்மாலையில் வேறு இரண்டு தங்கக்காசும், ஒரு தங்கப்பூ தொங்கட்டமும் கோர்க்கப்பட்டுள்ளன.

மிதியடிகள்:

ஸ்ரீ மீனாக்ஷி அம்மனின் திருவடிகள் தாங்கும் மிதியடிகள் இரண்டு கோயிலில் உள்ளன. அவற்றின் வரலாறு கேட்பவரையெல்லாம் மெய் மயிர்சிலிர்க்க வைக்கும். கி.பி. 1812 ஆம் ஆண்டு ரோஸ் பீட்டர் என்னும் ஆங்கிலத் துரைமகனார் மதுரை மாவட்ட ஆட்சியாளராக கலெக்டராக இருந்தார். அக்காலத்தில் மாவட்ட ஆட்சியாளரிடமே கோவில் மேற்பார்வையும் இருந்து வந்தது. ரோஸ் பீட்டர் நாள்தோறும் காலை மாலை குதிரைமேல் இருந்தபடியே கோவிலை ஒட்டியுள்ள சித்திரை வீதியில் காற்று வாங்கப் பலமுறை வலமாகச் சுற்றி வருவார். இந்து மதத்து ஆண்கள் பெண்களில் பலர் இன்றும் குளித்து முழுகி அருள் பாடல்கள் பாடிக்கொண்டும் ஆடி வீதி, சித்திரை வீதி வலம் வருவர். தெரிந்து தொட்டாலும், தெரியாமல் தொட்டாலும் தீச்சுடுவதைப்போல பயன் எதிர்பார்த்துச் சுற்றினாலும் எதிர்பாராமல் சுற்றினாலும் ஸ்ரீ மீனாக்ஷி கோவிலைச் சுற்றுபவர் களுக்கு பயன் கிடைப்பது மட்டும் உறுதியாம். இதற்கிணங்க ரோஸ் பீட்டர் துரைக்கும் அம்மன் அருள் கிடைத்தது.

ஒரு நாள் இடி மின்னலுடன் பெருமழை விடாது பெய்து கொண்டிருந்தது. மைய்யைக் கரைத்து ஊற்றுவது போல நள்ளிரவில் காரிருளில் மழை பெய்தது. இடையிடையே காதுகள் வெடிக்கும்படி முழங்கி இடி இடித்தது. நடுநடுவே மின்னல் ஒரு பக்கம் மின்னியது. துரை தம் மாளிகையின் மேல் மாடத்தில் ஒரு கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது பொழுதில் இடி விழுந்து மாடியிலிருந்து கீழே விழுந்தாக வேண்டும். இதற்கிடையில் ஒரு சிறுமி துரையின் கட்டிலின் பக்கம் வந்து கை தட்டி அவரை எழுப்பி விட்டு மிகவும் விரைவாகக் கீழிறங்கி ஓடினாள். துரையும் திடுக்கிட்டு எழுந்து சிறுமியைப் பின் தொடர்ந்து ஓடிக் கீழே மாளிகைக்கு வெளியே வந்தார். வந்ததும் இடிவிழுந்து மாடி இடிந்து கட்டிடம் முறிந்து போன காட்சி கண்டார். அதிர்ச்சியடைந்த துரை பதற்றத்துடன் சிறுமியைத் தேடினார். சிறுமி எங்கும் தென்படவில்லை. முடிவில் அவள் கோவில் கோபுரத்துள் நுழைவது போன்ற ஒரு காட்சி துரை கண்ணிற்கு தோன்றியது. வியப்படைந்த துரை கோயிலின் மேற்பார்த்து வந்த திருப்பணியை ஏற்று மீனாக்ஷியம்மைதான் சிறுமி வடிவில் வந்து தம்மை தக்க காலத்தில் காத்ததாக முடிவு செய்து மறுநாள் காலை திருக்கோவில் வந்து முதல் நாள் இரவு நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் குருக்கள் முதலானவரிடம் கூறினார். அவர் அம்மன் தம்மைக் காத்ததற்கு அறிகுறியாக ஏதாவது செய்து வைக்க வேண்டுமென்று தெரிவித்தார். அதற்கு அவர்கள் அம்மையை திருவடிப்பெருமையை எடுத்துக்கூறி குதிரை வாகனத்தில் அம்மை எழுந்தருளும்போது அம்மையின் இரு திருவடிகளையும் தாங்க இரண்டு மிதியடிகள் செய்து தரச் சொல்லினர்.

இதைக் கேட்ட துரைக்கு அவர்கள் கூறியது பொருத்தமாகத் தோன்றியது. தம் மாளிகையின் மேல் மாடிக்கு ஏறி இறங்கியதால் கன்றிய அம்மையின் திருவடிகளுக்கு மிதியடிகள் தகுந்தவை தாம் என நினைத்து என்றும் நினைவிருக்கும்படி அவற்றைத் தங்கத்தினால் செய்து உதவினார். மிதியடிகள் இரண்டில் ஒன்று 27-12-0 தோலா எடையுள்ளது. இது 211 சிவப்புக் கற்களும் 36 மரகதக் கற்களும் 40 பலச்ச வைரமும், இரண்டு முத்தும் இரண்டு நீலமும், இரண்டு வைடூர்யமும் பதிக்கப்பெற்றது. மற்றொன்று 28-8-0 தோலா எடையுள்ளது. அது 211 சிவப்புக் கற்களும் 40 பலச்ச வைரமும் 36 மரகத கற்களும் இரண்டு நீலமும் இரண்டு முத்தும் இரண்டு வைடூர்யமும் பதிக்கப்பெற்றது.

அம்மன் குதிரை வாகனப்புறப்பாட்டில் இந்த மிதியடிகள் இன்றும் அன்னையின் திருவடிகளில் பொருத்தப்படுகின்றன. துரை ஓய்வுபெற்ற பிறகு தம்மூர் செல்ல விருப்பமில்லாது என்னைக் காத்த தாய் மீனாக்ஷி த் தாய் அத்தாய் வாழும் பாண்டி நாடுதான் என் தாய் நாடு அதனால் நான் மதுரையில் தான் தங்க வேண்டும் என்று இங்கேயே தங்கினார். தாம் காலமான பின்னரும் அம்மனின் கோவில் கோபுரம் பார்த்த படியே அடக்கம் செய்யப்பட வேண்டுமென அவர் வேண்டிக் கொண்டார். அவ்வாறே மெயின் கார்டு பொட்டல் பக்கமான இன்றைய மேங்காடு பொட்டல் எனப்படும் ஒய்எம்சிஏ கல்லறையில் துரையை அடக்கம் செய்தனர்.

தங்க சந்தனக்கும்பா:

நமது கோவிலில் கலக்கிக் கொடுப்பதற்கென்று ஒரு பெரிய தங்க சந்தனக்கும்பா இருக்கிறது. இது மதுரையை ஆண்ட விஜய ரங்கச் சொக்கநாத நாயக்க மன்னரால் செய்து கொடுக்கப்பட்டது. இக்கும்பாவின் தெலுங்கு மொழியில் இது பற்றிய விளக்கம் எழுதப்பெற்றது. இதன் எடை 49-4-0 தோலா. பொற்றாமரையின் மேற்குக்கரையிற் கிளிக்கூண்டு மண்டபத்திற்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளியும் மாலைக் காலத்தில் சுவாமி அம்மன் ஊஞ்சல் காட்சி நடைபெறும் இந்தச் சாமி திருவுருவத்தையும் அம்மன் திருவுருவத்தையும் தனித்தங்கத்தில் திருமலை நாயக்க மன்னர் செய்து கொடுத்தார். சாமி உருவத்தின் எடை 323-12-0 தோலா. அம்மன் உருவத்தின் எடை 196-0-0 தோலா.

நாகர் ஒட்டியாணம்:

கண்ணைக் கவர்வதும் கவர்ச்சி மிக்கதுமான மற்றுமோர் ஆபரணம் நாகர் ஒட்டியாணம் என்பது இது இடுப்பின் கட்டுவதற்கேற்றபடி பெல்ட் போல தங்க இழைகளால் பின்னப்பெற்றது. நடுவில் படம் எடுத்த ஐந்தலை நாகத்தின் தலை வடிவம் இரண்டு பக்கத்தும் சதுரம் சதுரமாய் ஒன்றுக்கொன்று கீழ்கொக்கி மாட்டி மடக்க விரிக்க உதவும் அமைப்பும் கொண்டது. இந்த ஒட்டியாணம் உயர்ந்த தரமான 113 மாணிக்க கற்களும் 28 பலச்ச வைரமும் 8 மரகத கற்களும் 66 முத்துகளும் பதித்தது. இதன் எடை 33 தோலா. தழிழ்நாட்டுப்பெண்கள் அந்த காலத்தில் தோடு சிமிக்கி, மாட்டல், மூக்குத்தி, புல்லாக்கு, வங்கி, ஒட்டியாணம், கொலுசு, மிஞ்சி, வளையல்கள் மோதிரங்கள் தங்கச் சங்கிலி பதக்கம், தலைச்சுட்டி, இன்னும் அநேக அணிகலன்கள் அணிந்து அலங்காராமாய் அழகாகக் காட்சியளித்தார்கள். ஆனால் அசுர வேகத்தில் மாறி வருகின்ற இந்த புதிய நாகரீகக் காலத்தில் அந்த பழைய ஆபரணங்களை எல்லாம் அணிகின்ற பழக்கம் வெகுவாக குறைந்து போனது. நின்று போனது எனக் கூடச் சொல்லலாம். எனினும் திருமணம் சில முக்கிய விழாக்கள் வீட்டு வைபவங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் உறவுகள் கூடும் தருணம் மற்றும் செல்வந்தர்கள் வீட்டில் இவை எல்லாம் ஒருங்கே அணிந்து இருப்பதைப் பார்க்கலாம்.

நீல நாயகப் பதக்கம்:

திருமலை நாயக்க மன்னர் நீல நாயகப் பதக்கம் என்ற ஒரு பதக்கமும் செய்தளித்துளார் இது பட்டை தீட்டாத பெரியபெரிய நீலக்கற்கள் பொதிந்த பதக்கமாகும். உலகத்தில் உள்ள நீலக்கற்களுக்கே நாயகமான கற்கள் போல இப்பதக்கத்திலுள்ள நீலக்கற்கள் தோன்றுகின்றன. இவை உருவமும் பளபளப்பும் அழகும், கவர்ச்சியும் பொலிவும் கொண்டவை. ஏழாம் எட்வர்டு இளவரசர் ஒரு முறை இந்தியாவிற்கு வந்திருந்த போது மதுரைக் கோயில் பார்க்கவும் தமிழகம் வந்தார். மதுரையில் அவர் கோயிலையும் கோயிலில் உள்ள ஆபரணங்களையும் பார்த்து மகிழ்ந்தார். சொக்கிப்போனார் எனச்சொல்லலாம். பதக்கத்திலுள்ள பெரிய நீலக்கற்களின் பருமனையும் பட்டையிடாத நிலையிலும் கற்களின் அடிப்பாகம் திறவையாய் இராமல் தகடு பொருத்தி மறைத்திருந்தும், அதன் மறப்பும் எந்தப்பக்கமாகப் பார்த்தாலும் படமும் பளபளப்பும் ஒளியும், ஊடுருவித் தெளிவதையும் கண்டு ஆபரணங்களிலேயே இது மிக மேலானது எனப் பாராட்டி அவ்வளவிலும் அமையாது தம் தாயாரான விக்டோரியா மகாராணியார் பார்த்து மகிழ்வதற்காக இலண்டனுக்கும் கொண்டு சென்று திரும்பக் கோயில் வந்து சேர்ப்பித்தார் எனும் சொல்வர். அதனால் இப்பதக்கம் இலண்டன் ரிட்டர்ன்டு ஜெர்ம் ஆகப் பெயர் பெற்று உயர்ந்ததாகும். இதன் எடை 21-15-0 தோலா. இப்பதக்கத்தின் பட்டை தீட்டாத பத்து பெரிய நீலக்கற்களும் இரண்டு கெம்பும் ஒரு கோமேதகமும் பதிக்கப்பெற்றுள்ளன. இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

திருமஞ்சனக் கொப்பரை:

ஒரு நீராவிக் கப்பலின் உரிமையாளரால் காட்ச் சகோதரர் தென்னிந்திய வணிகருடன் வணிகஞ் செய்யும்போது மீனாக்ஷி அம்மன் சிறப்பைக் கேள்வியுற்று தான் தம் நீராவிக் கப்பலுக்கும் ந.ந.ங. மீனாக்ஷி எனப்பெயரிட்டார். தாம் எதிர்பார்த்தபடி வாணிகம் நடைபெற்றதாலும் யாதொரு விதமான தீங்குமின்றி கடலில் கப்பல் போய் வந்ததாலும் மீனாக்ஷி அம்மனுக்கு நன்றிக்கறிகுறியாக ஒரு பெரிய வெள்ளிக் கொப்பரை செய்து கோவிலுக்குக் கொடுத்தார். கொப்பரையின் இருபுறத்திலும் இதன் விளக்கம் ஆங்கிலத்திலும், தமிழிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் விழாக்களிலும் வேறு சிறப்பு நாட்களிலும் அபிஷேகத்திற்குரிய திருமஞ்சனம் இந்தக் கொப்பரையிலேயே நிரப்புவர். இதன் வெள்ளி எடை 3020-00 தோலா.

தங்கக்காசுமாலை - தங்கக்குடங்கள்:

செட்டிநாடு நகரத்தார்கள் சிவத்தொண்டு செய்வதில் பெயர் பெற்றவர்கள். அவர்கள் சென்ற ஈஸ்வர ஆண்டுக்கு ஒன்றிய ஈஸ்வர ஆண்டில் இரண்டு பெரிய தங்கக்குடங்கள் செய்து நமது கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அவ்விரண்டும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குடத்தின் எடை 2 கிலோ 323 கிராம். மற்றொரு குடத்தின் எடை 2 கிலோ 335 கிராம். இதற்கு மேலும் நகரத்தார்கள் மீனாக்ஷிஅம்மனுக்குத் தங்கக் காசுமாலை ஒன்று தந்திருக்கிறார்கள். இதன் எடை 23-0-2 தோலா இம்மாலையில் 55 காசுகள் உள்ளன. இக்காசுகள் தனித்தனி ஒரு மரகதமும் நான்கு சிவப்புக்கற்களும் பதித்த முகப்புக் கொண்டவை. காசுகளில் ஒரு பக்கம் ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருவுருவமும் மறுபக்கம் கோபுர உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இரத்தினச் செங்கோல்:

இதைச் செய்தளித்தவர் திருமலை நாயக்கர் செங்கோலின் எடை 67-14-20 தோலா. சிவப்புக் கற்கள் 761, வைடூரியம் 74, இதர பலவகை வைரங்கள் 21. மரகதம் 269. முத்துக்கள் 44 ஆகியவை கொண்டு செய்யப்பட்டதாகும்.

விழாக்கால அலங்காரம்:

ஆவணிமூலத் திருவிழாவின்போது நாலாம் நாள் விழாவில் ஸ்வாமி, அம்பாள் புறப்பாடு வைபவத்தில், அன்னைக்கும் ஐயனுக்கும் உச்சி முதல் கால்கள் வரை மற்றும் முன்புறம், பின்புறம் அலங்கரிக்கும் வகையில் முத்தினால் ஆன அங்கி முத்தங்கி முத்துமாலைகள் கொண்டு, விசேட அலங்காரங்கள் செய்விக்கப்படும். ஏழாம்நாள் விழாவில் அம்மைக்கும், அப்பனுக்கும் பட்டாபிஷேகம் முடிசூட்டு விழாவில் ""பட்டாபிஷேக கிரீடம் சூட்டப்பெறும். இதே கிரீடம் சித்திரைத் திருவிழா 8ம் நாள் வைபத்தின்போதும் சூட்டப்பெறும்.

திருத்தேர்கள் பற்றி:

தகவல் கிடைத்தவரை வைநாகரம் செட்டியார் குடும்பத்தார் சேதுமன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் அளித்த பொருட்களைக் கொண்டு அம்மன் திருத்தேர் செய்து 6-2-1878 ஈஸ்வர ஆண்டு தை 26ல் கும்பாபிஷேகம் செய்தவர் நாகப்பச் செட்டியார், வேங்கடாசலம் செட்டியார் ஆகிய இருவரும் ஆவார். இதற்குமுன் இரண்டு திருத்தேர்களையும் திருமலை மன்னர் செய்து கொடுத்துள்ளார். இன்னும் அநேக ஆடை அணிகலன்களை அவ்வவ்விழாக் காலங்களிலும், இதர காலங்களிலும் பட்டியலிட்டு மாளாது என்றாலும் முறைப்படி ஒன்றுபோல இன்றுவரைச் சிறப்பித்து செயல்பட்டு வரும் ஆலய பட்டர் முதல் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அதுபோதாததாகும். இதை ஒரு "ஸ்ரத்தாபக்தி கவன ஈடுபாடு எனக்கூறலாம்.

வைரக்கிரீடம்:

மதிப்பிற்குரிய தமிழ்வேள் உயர்திரு பிடி. இராசன் அவர்கள் திருப்பணிக்குழு அமைத்து அக்குழுவின் பெருமுயற்சியால் மாபெரும் கும்பாபிஷேகம் முன்நாளில் நடைபெற்றது. அக்குழுவும் அவரும் எடுத்த முக்கிய பல செயல்பாடுகளின் திரு மீனாக்ஷி யம்மை மூலஸ்தானத்திற்கு ஒரு வைரக்கிரீடம் அம்மையின் தோற்றத்திற்கும் அழகுக்கும் எடுப்புக்கும் ஏற்ப அவளருளாலேயே மிக நன்றென அமைந்தது. அஃது 3500 கிராம் தங்கத்தில் அமைந்தது. வெளிநாட்டில் பட்டைதீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3345 வைரக்கற்களும் 600 காரட் எடையுள்ள 4100 சிவப்பு கற்களும் பீடத்தில் பதிக்கப்பெற்றிருக்கின்றன. பன்னெடும் காலமாக நமது கோயிலில் இருந்து வந்த விலைமதிக்க முடியாத எட்டரைக் காரட் எடையுள்ள ஒரு மரகதக்கல்லும் அதே எடையுள்ள ஒரு மாணிக்கக் கல்லும் இக்கிரீடத்தில் பொருத்தபட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் 14 அரை அங்குலம். அதன் அடிப்பகுதியின் சுற்றளவு 29 அங்குலம். கிரீடம் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் சிற்ப சாஸ்த்திர முறைப்படி நல்ல வகையில் அமைந்துள்ளது.

தங்கக் கவசம்:

இதுவரை மூலஸ்தான மீனாக்ஷியம்மைக்கு தங்கக் கவசம் இல்லாமல் இருந்தது. ஒரு பெரிய குறை. அக்குறை சில ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கியது. கோயில் பணத்தில் இருந்து ஏறக்குறைய இரண்டு இலட்ச ரூபாய் செலவில் ஏழாயிரம் கிராம் எடை தங்கத்தில் நுட்பமான நகாசு வேலைப்பாட்டில் சாத்தினால் உப்பல் இல்லாமல் புடவை கட்டுவதுபோல் தோன்றுமாறு மிகப் பெருத்தமாக அக்கவசம் செய்துள்ளார்கள். முதன் முதல் 1974-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் தங்கக் கவசமும் வைரக்கீரிடமும் சாத்தப்பெற்றன. அதன்பின் அடியார்கள் விருப்பத்திற் கேற்ப ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலைக்காலத்தில் தங்கக் கவசமும் வைரக்கிரீடமும் அம்மனுக்கு சாத்துவது வழக்கமாக உள்ளது. கட்டணம் கட்டினால் எப்போதும் தங்கக் கவசம் வைரக்கிரீடம் சாத்துபடியாகி அம்மனை வழிபடலாம்.

எண்ணற்ற திருக்கோவில் ஆபரணங்களில் குறிப்பிட்ட சில சிறந்த ஆபரணங்கள் பற்றி மட்டும் அவற்றிற்குரிய சில குறிப்புகளுடன் இங்கே எழுதப்பட்டுள்ளது. ஆபரணங்களில் பதித்துள்ள நவரத்னங்களின் தன்மை அவற்றிற்கும் ஒன்பது கோளுக்கும் உள்ள தொடர்பு அவற்றை அணிவதால் உண்டாகும் பயன் முதலியவைகளைப்பற்றிய விளக்கம் தமிழில் சிலப்பதிகாரத்திலும் திருவிளையாடல் புராணத்திலும் சொல்லப்பெற்றுள்ளது. வடமொழியிற் ""பிருகத் சம்ஹிதா என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விரிதல் அஞ்சி கூற முடியவில்லை. இந்த நவரத்தினங்களில் வைரம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், வைடூர்யம், கோமேதகம், நீலமெனும் ஏழும் பூமியில் சுரங்கத்தினின்றும், முத்து, பவளம் இரண்டும் கடலிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்றன. இங்கு கண்டபடி, மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு ஆபரணங் கள் செய்தளித்த பெருமக்கள் அச்சிவபுண்ணியத்தால் அழியாத புகழை இகத்தில் பெற்று நிலைபெறவைத்துச் சிறப்படைந்ததைப்போலே பரத்திலும் நீங்காத பேறுபெற்றவர்களாகின்றனர். அவர்கள் அனைவரின் மரபு தழைக்கவும், புகழோங்கிடவும் அம்மையப்பர் அருள் புரிந்த வண்ணமாய் இன்றும் உள்ளனர் என்பதில் ஐயம் ஏதுமில்லை. வாழ்க இறைத்தொண்டு, வளர்க பெறுக நல் ஞானமும், பர ஞானமும்

திருச்சிற்றம்பலம்

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 18. மதுரைக் கோயிலின் திருவாபரணங்கள் »

முத்து ஆபரணங்கள் செப்டம்பர் 24,2018

ஆபரணங்கள் பற்றிய விளக்கமும் செய்தளித்தவர் மற்றும் அணிவிக்கும் காலம், விசேஷ அலங்கார விளக்கம்கோயில் ... மேலும்
 

பட்டாபிஷேகக் கிரீடம் செப்டம்பர் 24,2018

முத்து ஆபரணங்களில் பொதுவாக கேப்பை அளவான சிறிய முத்துக்களும் பலாக்கொட்டை அளவான பெரிய முத்துக்களும் ... மேலும்
 
ஆவணி மூல விழாவில் பிட்டுத்திருநாளில் சுவாமி வைகையைக் கரை அடைக்கக் கூலியாள் வடிவத்தில் புறப்பாடகிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar