Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டாபிஷேகக் கிரீடம்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 18. மதுரைக் கோயிலின் திருவாபரணங்கள்
முத்து ஆபரணங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
04:09

ஆபரணங்கள் பற்றிய விளக்கமும் செய்தளித்தவர் மற்றும் அணிவிக்கும் காலம், விசேஷ அலங்கார விளக்கம்

கோயில் மாநகர் மற்றும் விழா நகர் எனும் சிறப்புப் பெயரும் பழம் பெருமையும் கொண்டது நம் மதுரை மாநகர். அருள்மிகு அங்கையற் கண்ணம்மையாரும் சொக்கநாதப் பெருமானும் திருக்கோயில் கொண்டெழுந்தருளி இவ்வூரை வாழ்கின்றனர். இம் மாநகரை கோநகராக் கொண்டு ஆண்டு வந்த பாண்டிய வேந்தர்களின் குலதெய்வமாவார்கள். கயற்கண்ணியாரும் சொக்கநாதப் பெருமானும் தமக்குத் தாயும் தந்தையுமான இவ்விரு பெருமக்களுக்கும் பாண்டிய வேந்தர்கள் செய்தணிவித்த ஆபரணங்கள் அளவில்லாதவை. அவர்களை அடுத்து அவர்களுக்கு உதவியாக வந்த ஹம்பியரசர்களும், பின் வந்த நாயக்க மன்னர்களும் தமிழ்நாட்டுக் குறுநிலைமன்னர்களும் பாண்டியர்கள் போல தம் அன்பு பெருக்கால் அம்மையப்பருக்கு நவரத்தின ஆபரணங்களை அளவில்லாமற் செய்து கொடுத்திருக்கின்றனர். அவற்றில் நல்ல வேலைப்பாடு மிகுந்தமைந்தவைகளும் அழகானவைகளும் விழாக்காலங்களில் சாத்தப்படுபவைகளும் நகைப்பார்வையின்போது காண்பிக்கப்படுபவைகளுமான சில ஆபரணங்கள் மட்டும் ஈங்கு விளக்கக் கூறப்படும்.

அன்றையக்காலம் தொட்டு இன்றையக்காலம் வரை அரசர் முதல் சாதாரணக்குடிமகன் வரை ஆண், பெண் என இரசாரரும் அவரவர் பதவி, வசதிக்கேற்றபடி ஆபரணங்கள் நகைகள் தலை உச்சியிலிருந்து கால்கள் வரை பலவித அணிகலன்களை அணிந்து வந்தனர். அவற்றில் உலோக வகைகளிற் தங்கமும், வெள்ளியும் அதிகம் இடம்பெற்றிருந்தன. ஏனைய பித்தளை, செம்பு உலோகங்களைக் கூட அணிப் பொருட்களாக்கி அணிந்து மகிழ்ந்தனர். நீரில் கிடைக்கும் முத்தும், பவளமும், சங்கு இன்ன பிறவும், நவரெத்தினங்களையும் அணிந்து மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி இவைகளை நிறையச் சேமித்தும் வைத்திருந்தனர். அச்சேமிப்பின் அளவைப் பொறுத்தே அவர்களின் செல்வ நிலையைக் கணக்கிட்டனர். ஆபரணங்கள் அணிந்து அழகு சேர்ப்பதற்கென்று மட்டுமின்றி, கோள்கள் பாதிப்பினின்று மீளுவதற்கும், வைரங்கள் உதவுமென்றும், மனம் மற்றும் உடலை பலப்படுத்த மருத்துவ ரீதியாய் இவைகள் பயன்படுமென்றும், தங்கம், வெள்ளி, தாமிரம் என இவைகளைப் பொடித்து மருந்தாக்கி உட்கொண்டனர் என்றும் இவ்விதம் கணக்கிலடங்காப் பயன்தருகின்ற இப்பொருட்களை நமக்களித்தவன் இறைவனே என்று, நாமணிந்து மகிழ்வதைப் போல் இறைவருக்கும், இறைவியருக்கும் அணிவித்து அழகு பார்க்க ஆசைப்பட்ட மனிதர்களின் மனப்பாங்கு என்னே!

அன்னை ஸ்ரீ மீனாக்ஷியும், சோமசுந்தரேஸ்வரரும் தரையிறங்கி வந்து தமிழகம் ஆண்டனர் என்றால் அவரிருவருக்கும் ஆபரணங்களுக்கென்ன பஞ்சமிருக்கும். அங்ஙனம் அவர்களுக்கு என இருக்கும் ஆபரணங்களைப் பற்றியும், அதன் பேரழகு, பெரும்மதிப்பு பற்றியும், அதனை மனமுவந்து அளித்தோர் பற்றியும் இங்கே திருவாபரணங்கள் என்ற வரிசையில் சிறிது பார்ப்போம்.

திருவாலவாயர் திருக்கோவிலில் தினந்தோறும், பக்தர்கள் விரும்பி அணிவிக்கச் சொன்ன போதும், மற்றும் விழாக்காலங்களிலும், அம்மையப்பனுக்கு அணிவிக்கப்படும் திருஆபரணங்களை அதாவது அணிகலன்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இவைகளில் முத்துக்கள், பவளங்கள், நவரத்தினங்களால் ஆன பல்வேறுவகை “ஆபரணக்களஞ்சியம்” என்று சொல்லுமளவுக்கு ஏராளமான விலைமதிப்பற்ற, கிடைப்பதற்கரியவகை ஆபரணங்கள், மிகப்பழமையான காலத்திலிருந்து இன்றளவுவரை செய்தளிக்கப்பட்ட பொக்கிஷங் களைப்பற்றி இங்கு காண்போம்.

முத்து ஆபரணங்கள் :

1.முத்துச்சொறுக்கு, 2.முத்துஉச்சிக்கொண்டை, 3.முத்து மாம்பழக்கொண்டை, 4. முத்து மேற்கட்டி, 5. முத்தங்கி, 6. முத்துக்கிளி, 7. முத்துமாலை, 8. முத்துக்கடிவாளம் இவைகள் பெரிதும் பாண்டிய மன்னர்களால் அளிக்கப்பட்டவை.

பாண்டி முத்து :

“பூழியர் கோன் தென்னாடுடைத்து” என்று புலவர் பலர் பாண்டிய நாட்டைப் புகழ்வர். அப்புகழ்ச்சிக்கேற்பப் பாண்டியர் நாட்டில் கொற்கை. தொண்டி ஆகிய துறைமுகங்களில் முத்துக்குளிப்பதுண்டு. உரோம் முதலான வெளியிடங்களுக்கெல்லாம் “பாண்டி முத்து” அக்காலத்தில் ஏற்றுமதியானது உலகறிந்தது. பாண்டியர்களும் உயர்ந்த முத்துக்களால் வகை வகையான ஆபரணங்கள் செய்து நம் அம்மையப்பருக்கு அணிவித்து அழகு பார்த்தனர். அதனால் கோயில் ஆபரணங்களில் முத்தாபரணங்கள் தான் கூடுதலாக இருக்கும். முத்துச்சொறுக்கு, முத்து உச்சிக்கொண்டை அம்மையப்பருக்குத் தனித்தனி முத்தங்கி, முத்துமாலைகள், முத்துக் கடிவாளம், முத்து மேற்சுட்டி என முத்தால் ஆன ஆபரணங்கள் எத்தனை எத்தனையோ இங்குண்டு. நவராத்திரியிலும், வேறு சிறப்பு நாட்களிலும் மூலத்தால் ஆன அம்மனுக்கு முத்துச்செறுக்கு, முத்து உச்சிக்கொண்டை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். இந்த அலங்காரம் பார்க்கத் தாய்மார்கள் மகிழ்ச்சியுடன், ஆர்வத்துடனும் சாரை சாரையாக வருவார்கள். முத்துச்சொறுக்கின் எடை 162 தோலா இதில் 4921 முத்துக்களும் 844 சிவப்பு கற்களும், 120 பலச்ச வைரங்களும், 39 மரகதங்களும், பதிக்கப்பெற்றுள்ளன. இது போன்ற சிறப்புள்ளது பெரிய முத்து மேற்கட்டி ஆண்டு தோறும் திருக்கல்யாணத்தன்று திருக்கல்யாண மேடையில் அமைந்துள்ள மணவறை மண்டபத்தில் மேற்கட்டியாகக் கட்டப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இந்த பெரிய முத்து மேற்கட்டி சதுரமான வில்வெட்டில் அமைந்தது. நான்கு பக்கங்களிலும் ஒரமாக பட்டுத்துணி தைக்கப்பெற்று சரிகை வேலைப்பாடு கொண்டது இதன் நான்கு மூலைகளிலும் இருதலை யாழி, கிளி, புலி, பறவைகள், தாமரைப் பூ, சூரியகாந்திப் பூ என்பனவற்றின் உருவங்கள் எண்ணற்ற முத்துக்களால் கண்கவருமாறு அமைக்கப் பெற்றுள்ளன. வருந்தி எண்ணினால் இச்சிறிய முத்துக்கள் 71755க்கும் மேலென்பது விளங்கும்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 18. மதுரைக் கோயிலின் திருவாபரணங்கள் »

பட்டாபிஷேகக் கிரீடம் செப்டம்பர் 24,2018

முத்து ஆபரணங்களில் பொதுவாக கேப்பை அளவான சிறிய முத்துக்களும் பலாக்கொட்டை அளவான பெரிய முத்துக்களும் ... மேலும்
 
ஆவணி மூல விழாவில் பிட்டுத்திருநாளில் சுவாமி வைகையைக் கரை அடைக்கக் கூலியாள் வடிவத்தில் புறப்பாடகிச் ... மேலும்
 

உரோமனியர் காசு மாலை செப்டம்பர் 24,2018

பண்டு தமிழகத்திற்குள் மேற்கிலுள்ள உரோம், கிரேக்கநாடுகளுக்கும் வாணிபத் தொடர்பு இருந்ததாக வரலாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar