Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உட் கோபுரங்கள்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 19. மதுரைக் கோபுரங்கள்
ராஜ கோபுரங்கள் நான்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
04:09

20. மதுரைக் கோபுரங்கள்

பிரபஞ்சபுரத்தே எத்தனை எத்தனையோ கோட்களின் புரங்கள், அத்தனையும் வான் புரத்தே நீந்தி விளையாடுகின்றன. அஃதில் ஞானம் விளையாடும் பூமிபுரம் ஒன்று. இதனில் நீர்ப்பகுதி அறுபது விழுக்காடும் காடுகள் எட்டு விழுக்காடும் மலைகளும் மலை சார்ந்த காடுகளும் சேர்ந்து பன்னிரண்டு விழுக்காடும், சமவெளி பத்து விழுக்காடும் பூமியின் உட்புறத்தே கொதித்து குதிக்கும் அனல் குழம்பு பத்து விழுக்காடும் பொதுவாக இதனை பூமியின் மேற்புறக் கணக்கில் கூறப்படுகின்றபொழுது நீர் 75 விழுக்காடுகளும் நிலம் 25 விழுக்காடு எனவும் கூறுவர். பகலவனின் மிகுந்த ஈர்ப்பு விசையில் பூமி தன் குட்டிக்கோள் சந்திரனுடன் தன் நீள்வட்டப்பாதையில் தற்பண்பு மாறாமல் சுற்றி வருகிறது. விண்ணில் வெளியினின்றும் விண் சக்தி எனும் வான் சக்தியினை  மண்ணிற் பெற்ற வண்ணமாய் இருப்பதை நம்முன்னோர்கள் மெய்ஞானியர் உணர்ந்து உரைத்தனர். இன்றைய காலத்தில் மாந்தர்கள் அதை முழுமையாக உணர்ந்தார்கள் என்று கூறுவதற்கில்லை.

பூமி புரத்தில் வாழ் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் தாவரங்கள் என அனைத்து உயிர்களும் அவ்வான் சக்தியினால் கட்டுப்படுத்தப்பட்டும் அதன் மாறுதல்கட்கு உட்பட்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. புதிர் நிறைந்த ரகசியங்கள் கொண்ட புரிந்து கொள்ளவியலா இவ்வான்சக்தி பற்றி இன்றைய விஞ்ஞானம் பல கோணங்களில் தொடர்ந்து ஆய்ந்து வருகின்றன. ஆனால் அன்றே மெய்ஞானிகள் பல படிகள் மேல் சென்று அவ்வான் சக்தியினை குறிப்பாக மனித உயிரிகள் எடுத்தாளவும் விரும்பும்படி பெற்றாளவும் கற்றுக்கொடுத்திருக்கின்றனர். மிகு விருப்பம் பக்தி தவநெறி யோகம் மிகு அறிவு ஞானம் வினையாற்றல் கர்மம் என்ற வழிகளையும் சாஸ்திரம் ஆகமம் என முறைகளையும் கூறி நெறிப்படுத்தினர். அதனை நிரூபிக்கும் ஒரு செயலாக கோபுர கோ இல் மூலம் வான்சக்தியை கொள்முதல் செய்ய பயிற்சி தந்தனர். இப்படியும் கூறலாம்.

யோக ஆற்றலால் உடலில் உள்ள ஆற்றலைப் பெருக்கி, ஞான ஆற்றலால் அதனை நிலைநிறுத்தி பக்தி ஆற்றலால் சேமித்தளிக்கவும் கோவிலில் உள்ள கோபுரங்கள் மூலம் வழிவகுத்து நிரூபணம் செய்திருக்கின்றனர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என வெறும் வார்த்தையோடு நில்லாமல் தரிசன பலன் மற்றும் அதன் அருகே செல்லுகிற போது அனுபவபலன் முதலியவற்றை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். கோபுரத்தை வெறும் உயரமான ஒரு கட்டிடத்தொகுதி எனப் பார்க்காமல் அதனுள் இருக்கும் பல நுணுக்க சக்தியால் முன்னோர்கள் எவ்வாறு நமக்காகப் பலனளிக்க வைத்தார்கள் என்பதை நாம் சிறிது ஆய்வோம். கோபுரத்தின் கீழ்ப்பகுதி அபூர்வமான ஒரு சக்திப் பரவலை உடலையும் உள்ளத்தையும் ஊடுருவி நாம் அறியாமலே நம்முள் உட்புகுகிறது என்பதை உணர்வது எங்ஙனம். கோபுரம் வெறும் சின்னமாக இருப்பதாகக் கருதிவிடாமல் விஞ்ஞானிகள் இனிமேலாயினும் அதன் கருத்தினுற் புகுந்து ஆராயத்தலைப்பட்டால் அவ்வாரய்ச்சி உண்மைகளின் உயிரோட்டங்கள் மானுடத்தின் உயிர்ப்பரவலை ஊக்குவிக்கும் அருமருந்திது என உலகோர்க்கு உணர்த்தினால் அதுவே ஆன்மீக வாதிகளுக்கு மட்டுமின்றி மனித சமுதாயம் அத்தனைக்கும் செய்யும் உண்மைத் தொண்டாக இருக்குமன்றோ!

தாவரம்

தன் மீது வீழ்ந்த விதையை இந்நிலப்புரம் தன் கற்பத்தே தாங்கி அதன் முளைக்கும் தன்மை வரும்வரை தன்னுள் அதனை வளர்த்து பின்வெளிகொணரும் வகையில் முளைவிட்டு, இலை வைத்து, வளர்ந்து உருப்பெற்ற பின்பும் அத்துடன் தன் கடமை முடிந்த பாடில்லை என எண்ணி அதன் வேரைத் தன்மடியில் தவழவிட்டுத் தாயாக தன்னிடம் இருந்து நீரையும் பிற உணவுச் சத்துக்களையும் தன்னிடமிருந்தும் வான்புரத் தந்தையிடம் இருந்தும் வெகு வளர்ச்சி மற்றும் பலன் கிடைக்கச் செய்வதை சற்று சிந்திப்போம். விதைகள் முளைத்து வருவது இயற்கை எனினும் முளைக்கும் அப்பண்பை அதற்கு ஊட்டியது யார். அதற்கு வளர்ச்சி என்ற உயிரைக் கொடுத்து யார். உன்னால் ஒருவேளை அவ்விதையை முளைக்கட்டச் செய்து ஊட்டச்சக்தி பெற கண்டுகொண்டு அதனை உணவாக்கிக் கொள்ள முடியும், ஆனால் அதற்கு முளைகட்ட ஆதாரமான உயிர்ப்பரவலை உன்னால் அளிக்க முடியுமா ...

உன்னால் ஒரு உயிருள்ள விதையினை உருவாக்க முடியுமா? ஒரு மல்லி விதையை இராண்டாய்ப் பிளந்து வளரச் செய்ய முடியும் அதனை அவ்வாறே செய்ய வேண்டும். ஒரு நெல்லை அதன் உமியை மேற்தோலை உரித்து வளர்ந்திடச் செய்ய முடியுமா. கரும்பை வெட்டித்துண்டாக்கினாலோ அதன் ஒரு கணுமட்டும் சிதையாது இருந்தால் அது வளரும் தன்மை பெறுகிறது. ஒவ்வொரு தாவரத்திலும் அதன் உயிர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கிறது. அவ்வுயிர் எல்லாத்தாவரத்திற்கம் பொது எனக் கண்டு அப்பொதுவான உயிர் யாது, அதைப்படைக்க நம்மால் முடியும். என விஞ்ஞானம் கண்டு, கூறிவிட்டால் அன்றுடன் தாவர விஞ்ஞானம் அத்தோடு நின்று போகும்.

  தாவரம், பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன வெட்டவெளியிலும் காட்டிலும் தட்பத்திலும் வெட்பத்திலும் சாதாரண கண்ணால் காண முடியாத கிருமிகளிலும் உள்ள உயிர்களைக் கண்டறிந்து அதனதன் சூக்ஷ்ல்களுக்குத் தக்கவாறு அவைகள் வளர்ந்து பல்கிப்பெருகுவதும் இயல்புகள் மாறாத அதன் பண்புகளைக் கண்டறிந்து விட்டோம். அதை அழிக்க அதில் மாற்றம் ஏற்படுத்த அல்லது வளராமல் செய்துவிட நம்மால் முடியும்.

உதாரணமாக ஒரு விதையை வறுத்துவிட்டால் அது முளையாது என்ற உண்மை போல ஒரு உயிரை உற்பத்தி செய்து அதனை இயங்க வைத்து விட்டால் இறந்த ஒரு எறும்பை உயிர்பெறச் செய்து விட்டால் அழிக்கும் உரிமையினை நாம் பெறுவது தடையொன்றுமில்லை. அல்லாதவரை நாம் மனிதர்கள் வாழ் உரிமைகள் கூட நம்மிடமில்லை. நம்மை வாழவைப்பவர் எவரோ அவர்க்கே அவ்வுரிமை இருக்க முடியும், அவர் யார் ... அவர் கடவுள் என்றால் அதை நாம் ஒத்துக்கொள்ளா விட்டாலும் அல்லது ஒப்புக்கொள்ளும்வரை அதை எதிர்க்க நமக்கு உரிமையோ அறிவோ இல்லை என்பதே உண்மை. இது வாதிடும் விஷயம் இல்லை. புரிந்து கொள்ள முடியவில்லை. என்பதற்காக மறுக்கப்படுவது நியாயம் இல்லை.

ஆம்! இது உணரப்பட வேண்டிய ஒன்று. இவ்வுண்மையின் பேரளவு பரிமாணத்தை நம் சிற்றறிவில் புகுத்திவிட முடியாது. விஞ்ஞானத்தை நம்பி ஏற்றுகொள்ளுமட்டில் ஞானம், மெய்ஞானம், மிகு அறிவு கொண்டு பேராற்றல்களை அறிய நாம் முற்படுவதில் தவறில்லையே. அதுவரை முன்னோர்கள் கண்டத்தைச் சொல்லியதைச் செய்ததைப் பாரட்டவில்லையென்றாலும் பழியாது இருப்போம். வளர்ந்து உயர்ந்த மரங்கள் மழைபொழியக் காரணங்கள் எனவும், பெரும் மலைகளும் குன்றுகளும், மழை மேகங்களை தடுத்து மழை பெய்விக்கும் என்றும், உயர்ந்த வான்புரப்பரப்பில் இருந்து தரைப்புறம் தாக்க வரும் அல்லது இணையவரும் மின் என்ற மிகு ஒளி மற்றும் மிகு ஒலி இடியோசையும் கூட தாவரம் செழிக்க பயன்படும் எனவும் அதற்கு எதிர்மறையாக மெல்லிய ஓசை மெல்லிசை மெலோடியஸ் கூட அதே பண்புடையது என்றும் உயரே இருப்பதெல்லாம் உயிரினங்களுக்கு உதவத்தான் என்றும் உயர்ந்து நிற்கும் கோபுரமும் கூட எத்தனையோ வான் சக்திகளை நமக்கு பெற்றுத்தரும், அல்லது தந்து கொண்டிருக்கிறது என்றும் நாம் உணர்வோமானால் அவ்வுயர்ந்த மதுரைக் கோபுரங்கள் பற்றி ஒரு கதையும் சிறு விளக்கமும் கற்றுக்கொள்வோம்.

ஒரு பக்கம் அடைபட்ட குழாய் அல்லது ஒரு குடுவை அதனுள்ளே அடைபட்டுள்ள கண்ணுக்குத் தெரியாத சக்தியை அழுத்தத்தை நிறையை முறையே பவர், ப்ரஷர், வெயிட் தன்னகத்தே இவற்றை தக்க வைத்தக்கொள்ளும் என்பது மிகச் சாதாரண ஒரு உண்மை. அதே சமயம் அம் மூன்று சக்திகளும் வெளிச் சக்திகளால் தாக்குதல் பெறும்போது பாதிப்படைவதில்லை என்பதும் உண்மையே. அதே போல் ஒரு சதுரப்பெட்டி அல்லது ஒரு சதுர வளாகம். அவை சுவர்களால் அடைபட்டிருக்குமானால் அவை உட்புக வெளிச்செல்ல தகுந்த அளவு வழிவாசல் இருக்குமேயானால் அதாவது மேற்கூறிய அவ்விரண்டும் வெளிச்சக்திகளில் உட்புகும் அனுபவிப்பதும் உட்சக்தியை வெளிப்பரப்பிற்கு மாற்றுவதில் பயனளிக்கும் தன்மை பெற்றது. பொறியியல் கொண்டு இதை விளக்கிட முற்பட்டால் இது விரியும் என்பதால் இத்தோடு சுருக்கப்பட்டது. ஆகவே ஒரு கோவிலின் கோபுரத்தொகுதி வான்சக்தி ஈர்ப்புப்பொறி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். இந்நிலப்புரமும் அதனகத்தே வாழ் இதர பொருட்களும் ஆக்க அடிப்படையில் வானிலிருந்து வந்தவையோ ஆம். ஐம்பொருட்கள் பஞ்ச பூதம் என்பர். அவற்றின் கலவையே இந்நிலமும் அதனின் உள்ள அனைத்தும் அதனினின்றும் மேலானவை எவையிமில்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி, என இதனைச் சாதாரணமாக இன்றைய விஞ்ஞானம் ஒப்புக் கொண்ட உண்மையே அப்பொருட்களின் சக்திகளான ஒலி ஒளி ஈர்ப்பு அதிர்வு மற்றும் இரசாயன மாறுதல் என்ற இவ்வைந்தும் பல்வேறு அளவுகளில் மனித உயிர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களையும் பயன் அல்லது பாதிப்பு ஏற்படுத்தியவாறு இருந்து கொண்டே வரும். இதற்கு காரணமாய் இருப்பதென விண் ஆற்றல், கோளாற்றல் எனக் கூறுவர் பொதுவாக காஸ்மிக் எனர்ஜி எனப்படுவதாகும். நுண் கிருமி முதல் உலகின் அத்தனை உயிர்களும் இதன் கட்டுப்பாட்டில் இருப்பதாய் கூறப்படுகிறது. ஒவ்வொரு உயிரிகளும் இச்சக்திக்கு ஆட்பட்டே ஆக வேண்டும் எனவும் உயிர்களுக்கு ஏற்றவாறு அவைகளில் வாழுகின்ற வளர்கின்ற சூழல், வெப்ப தட்ப மாறுதல், அவற்றின் எடை, பரிமாணம்யாவும் பஞ்ச சக்திகளின் கலவை விகிதத்தின் அடிப்படையே. மேலும் அவ்வடிப்படையில் குணம், நலம், பண்பு, பண்பு மாற்றம், மற்றும் பற்பல மாறுதல்களுக்குட்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு உயிரிகளின் வாழ்நாள் கூட இதன் அடிப்படையே எனக் கூறுவர்.

குறிப்பாக கூறுவதானால் பொதுவான இருமைத் தத்துவம் என வழங்கி வரும் துன்பம் இன்பம் கூட இதன் கணக்கை பொறுத்ததாகவே அமையும் மேலும் ஒரு உண்மை, மனித உயிர்கள் பிற உயிர்கள் என இரண்டாக பார்க்கப்டும்போது மனிதர்கள் அல்லாத பிற உயிர்கள் இவ்வைந்து சக்திகைளையும் அறியாவிட்டாலும் அதன் இயல்புகளில் அதன் சக்திகள் புகுத்தப்பட்ட பண்புகளாய் நியதி வரையறை கட்டுப்பட்டு உண்பதும் உறங்குவதும். உறவு கொள்வது. உய்வதும் அவைக்களுக்கேற்றபடி நீதிகளின் பின்னணியில் வாழ்வதால் தன்னியக்கப் பண்பால் வாழ்வதால் அவைகள் நிம்மதியாக வாழ்கின்றன என்று கூறலாம். அவைகளுக்கு ஏதேனும் நிம்மதிக் குறைவோ துன்பமோ வருமாயின் அது மனிதர்களாலயே வந்தது எனலாம். மனிதம் என்னை மன்னிக்கவும்!

மாந்தர்களைப் பொறுத்தவரை உடல் கூற்றில் வளர்சிதை மாற்றமும் உடல் அனிச்சை செயல்களை தவிர்த்து ஏனைய அனைத்தும் அவனை தன் இச்சைப்படி சுதந்திரமாக தீர்மானிப்பதும் செயல்படுத்துவதும் கூடுமன்றோ. இது மனிதனின் பலமும் பலவீனமன்றோ, இதற்கு காரணம் என்ன. மனம் ஒன்றும் மற்றொன்று பிற இனங்களுக்கு இல்லாத ஒரு விசேஷ அறிவும் தான். அவ்விசேஷ அறிவுதான் ஆறாவது அறிவான பகுத்தறிவென்று எளிதாகச்சொல்வது வழக்கமாகிவிட்டது. மேலும் வளர்க்க விரும்பாது வான் சக்திக்கே மீண்டும் வருவோம். மனித உடல் குறைகளைக் களைய எத்தனையோ வழிகளைக் கண்டார்கள் நம் முன்னோர்கள் சரியை கிரியை என்ற முறையில் தன்னலம் கலந்த பிறன் நலம் பேணுதல் ஞானம் யோகம் என்ற முறையால் தன்னலமற்ற பிறர் நல மேம்பாடும் அதற்கான உடலும் மனமும் ஆற்றல் பெறும் வழியையும் பக்தி என்ற இறைவழிபாட்டில் எத்தகையவர்களானாலும் மிக எளிய முறையில் கடைபிடிக்கக்கூடிய இறைவனை சரணடைதல் கோவில் தெய்வங்களைப் போற்றிப் பாடி வணங்குதல் அவ்விறைவனுக்கு கோயில் கோபுரம் கட்டி அக்கோயிலிலும் கோபுரத்திலும் மாந்தர் அறியா வண்ணம் அக்கோயிலிலும் கோபுரத்திலும் தெய்வ சக்தியை வான் சக்தி எனப் பரவச் செய்தனர். இதை எளிதாய் நாம் விளங்கிக் கொள்ளும் வகையில் உற்றுப்பார்க்கும் வகையில் சைவ ஆகம நெறியில் ஒன்றான காமிக காரண ஆகமத்தின்படி நாற்சதுரப் பரப்பும், பரப்பே அமைந்த வீதிகளும் அமையப்பெற்ற அமைக்கப்பட்டது மதுரைத் திரு ஆலவாயப்பன் அங்கயற்கண்ணி மீனாக்ஷி யின் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் தன்னகத்தே நான்கு ராஜ கோபுரங்களையும் எட்டு உட்கோபுரங்களையும் இரண்டு கருவறை கோபுரங்களையும் விமானங்களையும் கொண்டதாகும். இதன் சிறப்புகள் சிதறிய வண்ணம் திருக்கோயில் ஆகம முறை மற்றும் மதுரைக்கோயில் சிறப்பிலும் காணலாம். மேலும் ஒரு சிறப்பு, மதுரை கடல் மட்டத்திற்கு மேல் 325 அடி உயரத்தில் உள்ளது. இம் 325ன் கூட்டுத்தொகை ஒன்று. ஒன்றினை ஒன்றால் வகுக்கவோ பிற எண்களை ஒன்றால் பெருக்கவோ செய்திடில் என்ன விளையும். தண்ணீரின் ஈர்ப்புவிசை ஒன்று ஆகவே. உயிரிகளுக்கு தேவையான ஈர்ப்பு விசையை எளிதாக கிட்டும் வகையில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் கூட எத்தனை ரகசியங்கள் அடங்கியிருக்கின்றன.? கோபுர உடல்களின் அமைப்பு குவியல்களில் நம்மால் காண முடிந்தவரை கிடைத்த குறிப்புகள்:

ராஜ கோபுரங்கள் நான்கு

1. கிழக்கு-சுந்தர பாண்டிய கோபுரம், கிழக்குச் சித்திரைவீதி முக்கியச்சுதைகள் : பெரியதும் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் பற்றி சித்தரிக்கும் சுதைகளைக் கொண்டது.

2. தெற்குக்கோபுரம் - தெற்குச் சித்திரைவீதி

முக்கியச்சுதைகள் : சுதைகளில் பல பிரம்மாண்டமானவைகள்

5 முதல் 14 அடி உயரம் கொண்டது

சுதையின் கண்கள், அதன் மூக்கிலிருந்து இரண்டரை அடி உயரத்தில் உள்ளது. கந்த புராணம், தசவாதாரம், சுப்ரமண்யரின் விஸ்வரூப தரிசனம், 25 தலைகளுடன் மஹா சதா சிவர், 50 கைகள், சபரி ஏகபாத மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவம், காளி நர்த்தனம், பஞ்சமுக லிங்கம் என பலப்பல.

3. மேலக்கோபுரம் - மேற்குச்சித்திரை வீதி முக்கியச்சுதைகள்திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், தசாவதாரம், பிட்சாடனர், துவார பாலகர், எனப்பலப்பல

4. வடக்கு கோபுரம் : மொட்டைக் கோபுரம்

வடக்குச் சித்திரை வீதி

முக்கியச் சுதைகள் : மிகக் குறைந்த சுதைக்களைக் கொண்ட பெரிய கோபுரமாகும். இதனை சித்திர மாடக்கூட அமைப்பு என்பார்கள்.


 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 19. மதுரைக் கோபுரங்கள் »

உட் கோபுரங்கள் செப்டம்பர் 24,2018

ஆடி வீதி கோபுரங்கள் 61. சித்திரக் கோபுரம்கிழக்கு ஆடி வீதிக்கும், தெற்கு ஆடி வீதிக்கும் நடுவே ... மேலும்
 
கர்ப்பக் கிரஹ கோபுரங்கள் (விமானங்கள் 2)1. சுவாமி கோவில் கர்ப்ப கிரஹத்தின் மேல் அமைந்த தங்க விமானம்.2. ... மேலும்
 
திருப்பணிமாலை - திருப்பணி விபரம் நூலில் கண்டபடிகிழக்கு கோபுரம் மாறவர்ம சுந்தர பாண்டியனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar