பதிவு செய்த நாள்
24
செப்
2018
04:09
கர்ப்பக் கிரஹ கோபுரங்கள் (விமானங்கள் 2)
1. சுவாமி கோவில் கர்ப்ப கிரஹத்தின் மேல் அமைந்த தங்க விமானம்.
2. அம்மன் கோவில் கர்ப்ப கிரஹத்தின் மேல் அமைந்த தங்க விமானம்
இதர முக்கிய சிறிய விமானங்கள் நான்கு பிரிவு
1. விநாயகர்
2. சுப்ரமணியர் அம்மன் சன்னதி)
3. அனுக்ஞை விநாயகர்
4. தண்டபாணி நந்தி சுவாமி சன்னதி)
5. சிவந்தீஸ்வரர், ஏகாதச லிங்கம் முத்துராமைய்யர் மண்டபம் 4 ராயக் கோபுரம், பூர்த்தியாகாமல் ஸ்தலம் நுழைவு வாயில் என சின்னங்களாய் நின்று கொண்டிருப்பது. இதர ரிஷபங்கள், பூதங்கள், சுதைகள் என்பன
1. ஆடிவீதி மதில், சித்திரை வீதி மதில் என இவற்றின் மேல் உள்ள சுதைகள் எழுபது ஜோடிகள் - மங்கையர்க்கரசி மண்டப சுதைகள் 1963 குட முழுக்கு காலத்தில் நிறுவப்பட்டது.
2. சுவாமி சன்னதி மஹா மண்டபத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் திருவிளையாடல் புராணப் படல விளக்கச்சுதைகள் உதாரணம் - பிட்டுக்க மண் சுமந்தது, ஸ்ரீ மீனாக்ஷி பிறப்பு, ஸ்ரீ மீனாக்ஷி திருமணம், திருமலை மன்னர் தீடிtட ஞிணிணண்ணிணூt, எல்லை காட்டிய படலம், கால் மாறி ஆடிய படலம், சுரம் தீர்த்த படலம், எல்லாம் வல்ல சித்தர் இன்னும் பலப்பல இடங்களில் எண்ணிலடங்கா சுதைகள் ரிஷிகள் இறையுருக்கள், பரிவார தெய்வங்கள் என எழுதித்தீராது எனலாம் சில கும்பாபிஷேக, குட முழுக்கு காலங்களில் புதிது புதிதாக சிற்ப வல்லுநர்கள் எண்ணங்களில் தோன்றி புராண மற்றும் வேத ஆகம சிற்பங்களை வடித்துள்ளதோடு பழுது நேரும்போது சிதிலம் அவைகளை மாற்றுவதாலும் எவை எவை எங்குள்ளன அல்லது எங்கிருந்தன என குறிப்பிட்டு கூற முடியாததும் உள்ளன. அவ்விதமே கோபுரங்களில் உள்ள சுதைகளை பட்டியலிடுவதில், கடலில் உள்ள உயிர் ராசிகளைக் கணக்கிடுவது போலாகும். மாமதுரைக் கோயிலை கலைக்கூடம் என்பதை விட கலைக்கடல் என்றோ அதற்கும் மேலாகவோ கூறுவதே பொருந்துவதாகும். அவற்றில் பக்தி நிலையில் பரவச நிலையில் மூழ்கி முத்தெடுப்போம். முக்தி பெறுவோம்.