பதிவு செய்த நாள்
25
செப்
2018
11:09
சேந்தமங்கலம்: பேளுக்குறிச்சி அருகே, என்.எஸ்.எஸ்., முகாம் மாணவர்கள், கோவிலை சுத்தம் செய்தனர். காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு, ஏழு நாள் முகாம் நேற்று முன்தினம் (செப்.,23ல்) தொடங்கியது.
முதல் நாளில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பேளுக் குறிச்சி அடுத்த, வெட்டுக்காடு கணவாய் ஆஞ்சநேயர் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். காலை தொடங்கிய பணி மாலை வரை நடந்தது. இதில், பிளாஸ்டிக் காகிதங்கள், கேரி பேக்குகள், கண்ணாடி பாட்டில்கள், முள்செடிகள் ஆகியவற்றை அகற்றினர்.