Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நான் அம்மா மதம்! ஆசையில்லா ஆனந்தம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கன்றுக்குட்டி கடவுள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
02:09

ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தில் வாழ்ந்த பக்தர் ராமதாசர். அவர் தன் குருவிடம், “குருவே!ராமபிரானின் தரிசனம் பெற தாங்கள் அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினார்.“நாளை ராமர் உன் வீட்டிற்கு விஜயம் செய்வார். தயாராகஇரு” என்றார் குரு.ஊருக்குள் இந்த விஷயம்பரவியது.வாசலில் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் ராமதாசர். வீட்டில் பலவித பலகாரங்கள் தயாரானது. எங்கிருந்தோ ஒரு கன்றுக்குட்டி யாரும் அறியாமல் அவர் வீட்டுக்குள் நுழைந்தது. அங்குமிங்கும் ஓடி பாத்திரங்களை தள்ளிவிட்டது. பட்சணங்களைத் தின்ன முயன்றது. அதைக் கண்டு வெகுண்ட ராமதாசர் கம்பால் கன்றுக்குட்டியை அடித்தார். வலி தாங்க முடியாமல் கதறியபடி ஓடியது.‘கடவுளுக்காக காத்திருந்த நேரத்தில், இப்படி கன்றுக்குட்டி வந்து அலங்கோலப்படுத்தி விட்டதே’ என்று வருத்தப்பட்டார் ராமதாசர். ராமவோ வரவே இல்லை. ஊரார் முன்னிலையில் தன் பக்தி பொய்த்து விட்டதே என்ற வெட்கப்பட்டார் அவர். குருவிடம் சென்று, “நீங்கள் சொன்னது போல ராமபிரான் வரவில்லையே!” என்று வருந்தினார் அவர்.குரு அவரிடம், “சற்று முன் தான் ராமபிரான் வந்து, கன்றுக் குட்டி வடிவில் உனக்கு காட்சி தந்ததாகவும், நீயோ கம்பால் நையப் புடைத்து அனுப்பியதாகவும் சொன்னார்,” என்றார்.திடுக்கிட்டார் ராமதாசர். “குருவே! கன்றுகுட்டி வடிவில் வந்த கடவுளை அறியாமல் மோசம் போனேனே!” என்று சொல்லி அழுதார். அப்போது ராமரே அங்கு காட்சி தந்து, எல்லாஉயிரும் கடவுளின் வடிவமே என்ற உண்மையைஎடுத்துரைத்து மறைந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar