பதிவு செய்த நாள்
26
செப்
2018
12:09
பொள்ளாச்சி: கோவில்களில் சுகாதாரம், வரவு செலவு விவரங்கள், நிலங்கள் பராமரிப்பு, பக்தர் களின் பாதுகாப்பு போன்றவை குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், ஐயப்பன் கோவில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், மாசாணியம்மன் கோவில்களில், சார்பு நீதிபதி ரவி மற்றும் ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கண்காணிப்பு கேமரா செயல்பாடு, திருக்கோவில் தூய்மை, பதிவேடுகள், தண்ணீர் வசதி, கழிப்பிட வசதிகளை பார்வையிட்டனர். அப்போது, கோவில் உதவி ஆணையர் ஆனந்த், கண்காணிப்பாளர் தமிழ்வாணனிடம் கோவில் குறித்த விபரங்களை நீதிபதி குழுவினர் கேட்டறிந்தனர்.